பக்கம்:மன ஊஞ்சல்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன் ஊஞ்சல் 22. ஜமீந்தார் சொன்ன பழையகதை, குணவதியம்மாளும் சுந்தரேசனும் வந்திறங்கியதைக் கண்ட கந்தசாமி வாத்தியார் முதலியவர்களின் மனத்தில், அவர்கள்தான் ஜமீன்தார் மாளிகையை விலைக்கு வாங்கப் போகிறார்களோ என்ற சந்தேகம் தோன்றியது. குணவதி யம்மாள் ஏழையைப்போல் வாழ்ந்தாலும், தன் கணவர் கயிலாயத்தைக் கொடுமைப்படுத்தி ஏராளமான பணம் சேர்த்து வைத்திருந்தாள் என்று அப்போதே ஊரில் பேசிக் கொண்டார்கள். ஆனால், எவ்வளவுதான் பணம் சேர்த்து வைத்திருந்தாலும், அதையெல்லாம் விட்டுவைக்கக்கூடிய வனல்ல அவள் மகன் சுந்தரேசன் என்பதும் ஊரறிந்த விஷயம். அவன் கண்ணுக்குத் தட்டுப்பட்ட பொருள்கள் மட்டுமல்லாமல், அவன் சந்தேகத்திற்கிலக்கான பொருள் களும் வீட்டில் தங்கியது கிடையாது. இருந்தாலும் குணவதி யம்மாள் எப்படியோ அவனுக்குத் தெரியாமல் பொருள் சேர்த்து வைத்திருக்கலாம் என்றுதான் அப்போது ஜமீன்தார் மாளிகையை விலைக்கு வாங்கி விட்டதாக கருதப்படுகிற அந்த மர்மப் பேர்வழிகள் அவர்களாயிருக்கக்கூடுமோ என்ற சந்தேகம் அங்கிருந்த வர்கள் உள்ளத்திலே ஏற்பட்டது ஒருகணம். ஆனால், மறுகணமே அந்தச் சந்தேகம் போய் விட்டது. அவர்கள் வந்த அவசரத்தையும் கடுகடுப்பையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/216&oldid=854330" இலிருந்து மீள்விக்கப்பட்டது