பக்கம்:மன ஊஞ்சல்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 207 குணவதியம்மாளின் முகத்தில் தோன்றிய சிடுசிடுப்பையும் நோக்கியபோது அவர்கள் மாளிகையைவிலைக்குவாங்கி அதில் வாழவந்தவர்களாகத் தோன்றவில்லை; அங்கு யாருடனோ சண்டை போட வந்ததுபோல் தோன்றியது. சுந்தரேசனாவது இறங்கி வந்தவுடன் கந்தசாமி வாத்தியார், மரகத அம்மாள், தங்கம் ஆகியோரைப் பார்த்து நலம் விசாரித்தான். குணவதி அம்மாள் அவர்களுடன் ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை. மாறாக அவர்களையெல் லாம் காணவே பிடிக்காதவள் போல் முகத்தைச் சுளித்துக் கொண்டும் வேறுபுறம் திரும்பிக் கொண்டும் இருந்தாள். வாசலில் நின்ற எல்லோரையும் கூடத்தில் வந்து அமரும் படியாக ஒருவர் வந்து வரவேற்றார். அவர்தான் அந்த மாளிகையின் காரியக்காரர் என்று நினைக்கவேண்டி யிருந்தது. . எல்லோரும் கூடத்தில் விரித்திருந்த பெரிய சமுக்காளங் களில் ஒன்றில் போய் உட்கார்ந்தார்கள். அந்தக் கூடம் முழு வதும் சமுக்காளங்கள் விரித்து வைக்கப்பட்டிருந்தன. அவற் றின் பரப்பைப் பார்த்தபோதே அன்று சுமார் நூறு நூற்றைம்பது பேராவது விருந்துக்கு எதிர்பார்க்கப் படு கிறார்கள் என்று நினைக்க வேண்டியிருந்தது. நேரம் செல்லச் செல்ல உள்ளுர் வாசிகளும் வெளியூர் வாசிகளுமான செல்வந்தர்கள் ஒவ்வொருவராகவும் குடும்பங் குடும்பமாகவும் அங்கு வந்து சேர்ந்தவர்கள். பதினொரு மணிக்கெல்லாம் அந்தக்கூடம் நிறைய ஆட்கள் கூடிவிட்டார் கள். அத்தனை பேரும் செல்வார்கள் அல்லது வியாபாரிகளாக இருந்தார்கள். ஜமீந்தாரையும். வீடு வாங்கப்போகிறவரை யும் தான் இன்னும் காணவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/217&oldid=854331" இலிருந்து மீள்விக்கப்பட்டது