பக்கம்:மன ஊஞ்சல்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 - மன் ஊஞ்சல் சரியாக மணி பனிரெண்டடித்ததும் அதே காரியக்காரர் வந்து எல்லோரையும் சாப்பாட்டுக் கூடத்திற்கு வரும்படி அழைத்தார். எல்லாம் அன்று விசித்திரமாக நடந்தது. விருந்துவைப்பவர் ஜமீந்தாரா அல்லது மாளிகையை விலைக்கு வாங்கியவர்தானா என்று யாருக்கும் தெரிய வில்லை. யாரும் இல்லாமலே காரியங்கள் நடைபெற்றுக் ாொண்டிருந்தன. காரியக்காரர் அழைத்தவுடன் எல்லோரும் சாப்பாட்டுக் கூடம் நோக்கிச் சென்றார்கள். ஆண்களுக்காகவும் பெண் களுக்காகவும் அங்கே தனித்தனியே பந்தி பிரித்து இலை போடப்பட்டிருந்தது. சாப்பாடு மிக உயர்ந்த வகையாகத் தயாரிக்கப்பட்டிருந்தது. ஜமீந்தார் வீட்டுத் தகுதிக்கேற்ற படி பத்துவகைக் கறிகளுடன். பாயாசம் சூப்பு அப்பளம் வடை ஆகியவற்றுடன் பாராட்டிப் பாராட்டிச் சாப்பிடும் படியான சுவையுடன் இருந்தது அன்றையச் சாப்பாடு. சாப்பாடு முடித்து எல்லோரும் வரவேற்புக்கூடத்திற்குத் திரும்பிவந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருக்கும்போது மாளிகை வாசலில் அழகான சிறிய பேபிசலூன் கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து ஜமீந்தாரும் அண்ணாமலைப் பண்டிதரும் இறங்கிக் கூடத்திற்கு வந்தார்கள். அந்தக் காரைத் தொடர்ந்து வந்த ஒரு வானிலிருந்து, ஒரு வழக் கறிஞரும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் இரண்டு கான்ஸ்டபிள்களும் இறங்கி வந்தார்கள். அவர்களும் ஜமீந்தாரையும் பண்டிதரையும் பின்தொடர்ந்து கூடத்திற்கு வந்தார்கள். அவர்கள் கூடத்திற்குள் நுழைந்தவுடனேயே, "இதோ வந்துவிட்டார்; ஜமீந்தார் ஐயா வந்துவிட்டார்!’ என்று அங்கு இருந்தவர்கள், குரல் எழுப்பினார்கள். எல்லோரும் எழுந்து நின்று வாசற் பக்கம் தலை திருப்பிப் பார்த்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/218&oldid=854332" இலிருந்து மீள்விக்கப்பட்டது