பக்கம்:மன ஊஞ்சல்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 209 ஜமீந்தாரும் பண்டிதரும் வழக்கறிஞரும் போலீஸ் இன்ஸ்பெக்டரும் கூடத்தின் மத்தியில் விரித்திருந்த இரத்தினச் சமுக்காளத்தில் போய் அமர்ந்தார்கள். அவர்கள் அமர்ந்தவுடன் வந்திருந்த விருந்தினர்களும் ஆங்காங்கே அமர்ந்தார்கள். சிறிது நேரம் ஜமீந்தாரும் அண்ணாமலைப் பண்டிதரும் தங்களுக்குள்ளே ஏதேதோ குசுகுசு என்று பேசிக்கொண்டார் கள். பிறகு அவர்கள் கூட வந்திருந்த வழக்கறிஞரை நோக்கியவுடன் அவர் “ஆரம்பிக்கலாமா? : என்று கேட்டார். "ஆரம்பிக்கலாமா?' என்று அவர் கேட்ட வார்த்தை கூடியிருந்த அத்தனை பேரின் காதுகளிலும் ஒலித்தது. எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. மாளிகையை வாங்குபவர் யாரும் இல்லாமலே இவர்கள் ஆரம்பிக்கப் போவது எதை என்று யாருக்கும் புரியவில்லை. இந்த மர்ம நாடகத்தின் அந்தரங்கமெல்லாம் இன்னும் சிறிது நேரத்தில் அம்பலமாகாமலா போய்விடும்? என்று எல்லோரும் அமைதி யாக இருந்தார்கள். ஜமீந்தார் தலையை அசைத்ததன் மூலம் தன் சம்மதத்தைத் தெரிவித்தவுடன், வழக்கறிஞர் தங்கம்! தங்கம்!,' என்று கூப்பிட்டார். அவர் தன்னை யழைப்பதன் காரணம் புரியாமல் தங்கம் திகைத்துக்கொண்டிருந்தாள். கந்தசாமி வாத்தியாரும் மரகத அம்மாளும் கூட ஏன் தங்கள் மகள் அழைக்கப்படுகிறாள் என்பது புரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்கள். தங்கம் உடனடியாக வராமல் போகவே 'நெய்யூர் கந்தசாமி வாத்தியார் மகள் தங்கம் இருந்தால், கொஞ்சம் 14 - פL.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/219&oldid=854333" இலிருந்து மீள்விக்கப்பட்டது