பக்கம்:மன ஊஞ்சல்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 மன ஊஞ்சல் திற்குப் பிறகுதான் அந்த இளைஞனுடைய மண்டை அங்கு கீழே கிடந்த கருங்கல் ஒன்றிலே மோதிக் காயம்பட்டு இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்ததை அவள் கவனித்தாள். இரத்தத்தைக் கண்டதும் அவளுக்கு ஒரே பயமாகப் போய் விட்டது 'அம்மா!' என்று கூவிக்கொண்டே வீட்டுக் குள் ஓடிவந்தாள். இராமாயணத்தில் சடாயுவதைப்படலம் படித்துக் கொண்டிருந்த மரகத அம்மா, மகள் கூச்சலைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள், திக்கித் திணறிக் கொண்டே, தங்கம் தான் கண்ட காட்சியைப் பற்றிக் கூறினாள். யாரோ தலையில் அடிபட்டு இரத்தம்சிந்தி மயக்கமாகக் கிடக்கிறான் என்ற உடனே, இரக்கச் சிந்தனை நிறைந்த மரகத அம்மாளின் இதயம் இளகியது 'பாவம்! யார் பெற்ற பிள்ளையோ! வா, போய்ப் பார்க்கலாம்!' எ ன் று கூறித் தங்கத்தையும் அழைத்துக் கொண்டு தோட்டத்திற்குள் சென்றாள். அங்கே அந்த இளைஞன் கிடந்த நிலையைக் கண்டதும், உடனடியாக அவனுக்கு மருத்துவ உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் மரகத அம்மாளுக்குத் தோன்றியது. அவள் தன் மகள் உதவியுடன் மெல்ல மெல்ல அவனைத் துரக்கிக் கொண்டு வந்து வீட்டின் உள்ளே கிடத்தினாள். தலையில் இருந்த காயம் அப்படி ஒன்றும் பெரியதாகத் தோன்ற வில்லை. மரகத அம்மாள் தனக்குத் தெரிந்த முறையில் காயம்பட்ட இடத்தைக் கழுவித் துடைத்து மஞ்சளை அரைத்து வைத்துக் கட்டினாள். பிறகு, உடலில் எங்கே னும் காயம்பட்டு இருக்கிறதா எ ன் று கவனித்தாள். எவ்விதமான காயமும் இல்லை. தாயும் மகளும் உணர்வற் றுக் கிடந்த அந்த இளைஞனின் உடலைப் பரிசோதித்துக் கொண்டிருந்த போது தங்கம் திடீரென்று 'அம்மா!' என்று திகைப்போடு கூவினாள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/22&oldid=854334" இலிருந்து மீள்விக்கப்பட்டது