பக்கம்:மன ஊஞ்சல்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 . மன ஊஞ்சல் இங்கே வா அம்மா!' என்று வழக்கறிஞர் அழைத்தார். ஏன் எதற்கென்று புரியாமலே தங்கம், ராதாவின் கையைப் பிடித்துககொண்டு ஜமீந்தார் முதலியவர்கள் இருந்த இடத் திற்கு வந்தாள். அவள் வருவதைக் கண்ட வழக்கறிஞர் 'கந்தசாமி வாத்தியாரும் மரகத அம்மாளும்கூட இங்கு வந்தால் நல்லது' என்று கூறினார். அவர்சளும் தங்கத்தைத் தொடர்ந்து வந்தார்கள். அவர்களைக் தொடர்ந்து குணவதி யம்மாளும் சுந்தரேசனும் வந்தார்கள். அழைக்காமலே! எல்லோரும் அருகில் வந்து சேர்ந்ததும் வழக்கறிஞர் எழுந்து நின்று கொண்டு, 'பெருங்குடி மக்களே, ஜமீந்தார் கருணாகரர் அவர்கள் இந்த மாளிகையை விற்கப்போவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். இப்போது அதன் கிரயப் பத்திரத்தை எழுதி முடிப்பதற்கே நாம் எல்லோரும் கூடி யிருக்கிறோம். இந்த மாளிகையை இப்போது, நெய்யூர் கந்தசாமி வாத்தியார் மகளாகிய இந்தத் தங்கம்மாளுக்குக் கிரயம் செய்து கொடுக்கப் போகிறோம்” என்று கூறிய வழக் கறிஞர் தங்கத்கின் பக்கம் தன் வலக்கை ஆள்காட்டி விரலைக் காட்டினார். அந்தக் கூட மு. மு. வ. து ம் வியப்பினால் வாயடைத்துப் போயிருந்தது. ஏழைக் கந்தசாமி வாத்தியா ரிடம் இந்த மாளிகையை வாங்க ஏது பணம்? தங்கத்தின் திருமணத்திற்கே கையில் காசில்லாமல் இதுவரை திண்டாடிக் கொண்டிருந்த அவருக்கு இந்த மாளிகையை வாங்கக் கூடிய பணம் எங்கிருந்து கிடைத்தது என்று பற்பல வாறு எல்லோரும் சிந்தித் துக்கொண்டிருந்தார்கள். இதெல்லாம் ஜமீந்தார்-அல்ல-அவரும் அண்ணா மலைப் பண்டிதரும் சேர்ந்து நடத்துகின்ற விளயாட்டு என்று எண்ணிப் பேசாமல் இருந்தாள் தங்கம். 'ஜமீந்தாரையா, இது என்ன விளையாட்டு? எங்களிடம் இந்த மாளிகையை வாங்க ஏது பணம்?' என்று கேட்டார் கந்தசாமி வாத்தியார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/220&oldid=854335" இலிருந்து மீள்விக்கப்பட்டது