பக்கம்:மன ஊஞ்சல்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 211. 'இதோ பாருங்கள்! என்று சொல்லி ஒரு சீட்டை எடுத்து நீட்டினார் ஜமீந்தார் கருணாகரர். அது ஒரு டிராப்டு (உண்டியல்) சீட்டுப் போலத் தெரிந்தது. கந்தசாமி வாத்தியார் அதை வாங்கிப் பார்த்தார். அரசாங்க பாங்கி யின் அந்த உண்டியல் சீட்டில். தங்கம் பெயருக்கு ஐம்பது லட்ச ரூபாய் கொடுக்சச் சொல்லி எழுதியிருந்தது. கந்தசாமி வாத்தியாரால் தன் கண்களையே நம்பமுடியவில்லை. அதற்குள் ஜமீந்தார் எழுந்து நின்றார். அவர் ஏதோ பேசப் போகிறார் என்று அறிந்த வழக்கறிஞர் கீழே அமர்ந்து விட்டார். விருந்தினர்கள், வியப்புணர்ச்சியோடு கூடிய கண் களை நிமிர்த்தி ஆவலுடன் ஜமீந்தாரையே நோக்கினார்கள். பெருங்குடி மக்களே, பெரியோர்களே, தாய்மார்களே, நீங்கள் எல்லோரும் என்னவோ ஏதோவொன்று நினைத்துக் கொண்டிருக்கிற சந்தேகங்களை யெல்லாம் இப்போது நான் போக்கிவிடுகிறேன் . இருபது ஆண்டுகளுக்கு முன்னால், நான் பள்ளிக் கூடத் திலே படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு உயிர்த்தோழன் ஒருவன் இருந்தான். அவன் பக்கத்திலிருக்கும் சித்திர நல்லூரைச் சேர்ந்தவன். அவனும் நானும் இணைபிரியாத தோழர்களாய் இருந்தோம். அவன் எப்போதும் என்கூடவே யிருந்தான். நான் அவன் வீட்டிற்குப் போவதும் அவன் என் வீட்டிற்கு வருவதும் இப்படியாக இரண்டு பேரும் பிரியாமலே வாழ்ந்து வந்தோம். அந்த நண்பன் எங்கள் அளவு செல்வம் பொருந்திய குடி யில் பிறந்தவனல்ல. ஆகவே என் தந்தையார் அவர்கள் என்னை அவன் வீட்டிற்குப் போகக்கூடாதென்று சொல்வி விட்டார்கள். ஜமீந்தார் மகனான நான் சாதாரண மனித ருடைய வீட்டிற்குப் போவதை அவர்கள் விரும்பவில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/221&oldid=854337" இலிருந்து மீள்விக்கப்பட்டது