பக்கம்:மன ஊஞ்சல்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 மன ஊஞ்சல் ஆனால், வேண்டுமானால் அவனை எங்கள் மாளிகையிலேயே வந்திருக்கும்படி என் தந்தை கூறியதைக்கேட்ட அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது ஆனால், அவன் எனக்காகத் தன் கோபத்தை அடக்கிக்கொண்டு, எங்கள் மாளிகை யிலேயே வந்து தங்கினான். ஒருநாள் நான் உடல்நலம் சரியில்லாமல் படுக்கையில் கிடந்தேன். அப்போது அந்த நண்பன், என் தந்தை யாருடன் கூட இருந்து உணவுண் ண நேர்ந்தது. என் தந்தை யார் அவனை நோக்கி, "நீயோ எங்கள் அந்தஸ்துக்கு இணையானவன் அல்ல. எங்கள் வீட்டிலே ஒருமுறை சாப்பிட்டால், உங்கள் வீட்டிலே ஒருமுறை எங்களுக்கு விருந்து வைக்க வேண்டும். ஆனால், அதற்குத் தகுதியான செல்வம் உன் வீட்டில் கிடையாது. அப்படியிருக்கும்போது நீ எங்கள் வீட்டில் சாப்பிடுவது உனக்கு வெட்கமாக இல்லையா?’ என்று கேட்டார். உடனே என் நண்பனுக்குக் கோபம் வந்து 'என் தந்தையோ, பாட்டனாரோ எனக்கு இவ்வளவு செல்வம் வைத்து விட்டுப்போக வில்லை என்பது உண்மைதான். ஆனால், அதற்காக நான் கவலையோ, தளர்ச்சியோ அடையவில்லை. இந்த நாட்டிலே உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க இடமும் இல்லாத நிலை யிலே எத்தனையோ பேர்கள் தங்கள் குடும்பங்களை விட்டு விட்டுப் போயிருக்கும் நிலையில், என் தந்தையார் பாட்டனார் முதலியவர்கள் என்னை இவற்றிற்கெல்லாம் அலையாமல் ஒரளவு செல்வம் வைத்துவிட்டுப் போனதற்காக அவர்களை மனமாரப் போற்றுகிறேன். ஆனால், என் காலத் திற்குள் எப்படியும் உங்களுடைய மாளிகையையே நான் விலைக்கு வாங்கி விடுகிறேனா இல்லையா என்று பாருங்கள், உங்கள் காலத்திற்குள் இல்லாவிட்டாலும், என்காலத்திற்குள் நான் இதை விலைக்கு வாங்கிவிடுவேன்' என்று சபதம் செய் தான.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/222&oldid=854338" இலிருந்து மீள்விக்கப்பட்டது