பக்கம்:மன ஊஞ்சல்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 213 அதன் பிறகு அவன் என்னிடம் கூட சொல்லிக் கொள் ளாமல் வீட்டை விட்டுப் போய்விட்டான். ஆனால். அவனில்லாததால் எனக்கு உடல்நலம் மேலும் கெட்டு நான் ஆபத்தான நிலையை எய்தியது கண்ட என் தந்தை அவன் வீட்டிற்குச் சென்று. தான் விளையாட்டாகக் கேட்ட விஷ யத்தை மறந்து, பெரிய மனது பண்ணி வந்து என்னைப் பிழைக்க வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் அதன்படி அவன் திரும்பி வந்து என்னை மகிழ்வித்து, குண மாகும் வரை கூட இருந்து என் பெற்றோரையும் மகிழ்வித் தான. ஆனால், பாவம்! அவனுடைய இல்லற வாழ்க்கை சுகப் படவில்லை. பெரிய இலட்சியவாதியான என் நண்பனுக்கு அவன் பெற்றோர்கள், முற்றிலும் பொருத்தமான நற்குண நற் செயல்கள் பொருந்திய ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வைத்தனர். அவளோ, பொறுமையும் அடக்கமும் அன்பும் அறிவும் ஒருங்கே படைத்தவள். ஆனால், அழகு மட்டும் இல்லாதவள், சுத்தக் கருப்பு. அதனால், என் நண்பன் மிகவும் அழகுடைய பெண்ணொருத்தியைத் தானாகப் தேடிப் பிடித்து மூத்தவளின் ஒப்புதலோடு இரண்டாவது திருமணம் செய்து கொண்டான். அழகு ஒன்றையே முக்கிய மாகக்.கருதி அவளை மணந்துகொண்ட என் நண்பன் கடைசி யில் அவளுடைய குரூர குணத்தின் கொடுமை தாங்கமாட்டா மல் ஊரைவிட்டே ஓடி விட்டான். அவன் எங்கோ சாமியாராய்ப் போய்விட்டதாகப் பேசிக் கொண்டார்கள். அப்போது எனக்கும் மணமாகி விட்டபடியால் நான் என் நண்பனின் பிரிவினால் அவ்வளவாகத் துன்பப் படவில்லை. இருபது ஆண்டுகளாக என் நண்பனைப் பற்றிய செய்தி எதுவும் தெரியாமல் இருந்தது. ஆனால், ஒராண்டுக்கு முன்னால் திடீரென்று ஒரு நாள் சென்னையில் உள்ள என் வீட்டிற்கு வந்து அந்த நண்பன். 'நான் உன் தந்தையிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/223&oldid=854339" இலிருந்து மீள்விக்கப்பட்டது