பக்கம்:மன ஊஞ்சல்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 மன ஊஞ்சல் சபதம் செய்தபடி இப்போது உங்கள் மாளிகையை விலைக்கு வாங்கப் போகிறேன்' என்றான். என்னால் நம்பவே முடிய வில்லை... ஜமீந்தார் இந்த இடத்தில் சிறிது நிறுத்திவிட்டு வேலைக்காரன் ஒருவனைத் தண்ணிர் கொண்டு வரும்படி சொல்லிக் குடித்தார். ஜமீந்தார் கூறிய இந்தக் கதையை அக்கரையோடு கவனித்துக் கொண்டுவந்த விருந்தினர்கள், மேற்கொண்டு அவர் என்ன சொல்லப் போகிறார்? அவரு டைய நண்பர் யார்? அந்த நண்பருக்கும் தங்கத்திற்கும் என்ன தொடர்பாயிருக்கும்’ என்றெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டிருந்தார்கள். நீர் குடித்து முடித்தவுடன் ஜமீந்தார் கருணாகரர் மேலும் தன் கதையைத் தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார். இவர் இன்னாரைப் பற்றித்தான் சொல்லுகிறார் என்று கந்தசாமி வாத்தியாரும் மரகத அம்மாளும் புரிந்து கொண் டார்கள். இருந்தாலும், தங்கள் வியப்புணர்ச்சிகளை வெளிப் படுத்தி விடாமல், முழுவதும் சொல்லி முடிக்கட்டும் என்று காத்துக்கொண்டிருந்தார்கள். ஜமீந்தாரின் கதையைப் புரிந்துகொண்டவர்கள் அங்கு இன்னும் இரண்டு பேர் இருந்தார்கள். அவர்களும் கதை முழுவதும் முடியட்டும் என்றுதான் காத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யாரென்றால், சுந்தரேசனும், அவனுடைய தாயார் குணவதியம்மாளும் தான். ஜமீந்தார் மீண்டும் கதையைத் தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தபோது அந்த வரவேற்புக்கூடம் முழுவதும் ஒரே அமைதியாக இருந்ததால், அவருடைய குரல் சணர் என்று ஒலித்தது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/224&oldid=854340" இலிருந்து மீள்விக்கப்பட்டது