பக்கம்:மன ஊஞ்சல்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ህ06mጽ ஊஞ்சல் 23. குணவதியம்மாள் செய்த கலாட்டா ஜமீந்தார் தன் கதையைத் தொடர்ந்தார் : அந்த நண்பனைத் திடீரென்று சந்தித்தால் ஏற்பட்ட ஒர் இன்ப அதிர்ச்சியுடன், அவன் கூறிய இந்தச் செய்தி என்னைத் திகைப்படையச் செய்தது. ‘நண்பா, அதெப்படி நீ எங்கள் மாளிகையை விலைக்கு வாங்க முடியும்?' என்று கேட்டேன். இந்தக் கேள்வியைக் கேட்டதும் அவனுடைய முகத்தில் கோபம் கொந்தளித்தது. 'கருணாகரா, இன்னும் என்னை நீ கையாலாகாதவன் என்றா நினைத்துக் கொண்டிருக்கிறாய்? உன் தந்தை தான் என்னை ஏளனமாக மதித்தார் என்றால், உன்னிடமும் அந்தப் போக்கு அப்படியே காணப்படுகிறதே. பெற்றவருக்குப் பிள்ளை யென்பதை அப்படியே காட்டுகிறாயோ?" என்று கேட்டான். "கொஞ்சம் பொறுமையோடு கேள். நீ எவ்வளவுதான் பணம் வைத்திருந்தாலும், உரியவன் விற்க முன்வந்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/225&oldid=854341" இலிருந்து மீள்விக்கப்பட்டது