பக்கம்:மன ஊஞ்சல்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 மன ஊஞ்சல் தானே நீ எதையும் வாங்க முடியும். நான் இப்போது என் மாளிகையை விற்கவேண்டிய அவசியம் என்ன வந்தது?’ என்று கேட்டேன். அப்போது தான் அவன் நான் கேட்ட கேள்வியின் பொருளைச் சரியாக உணர்ந்து கொண்டான். பிறகு அவன் என்னிடம் பணிவாகவும் குழைவாகவும் பேச ஆரம்பித்தான். 'கருணாகரா, நீ என் இளம்பருவத் தோழனல்லவா? என்னுடைய சபதம் நிறைவேற நீ உதவி செய்ய வேண்டிய யது உன் கடமையல்லவா?' என்று கேட்டான். 'உண்மைதான். அது என் கடமைதான். ஆனால், நீ எடுத்துக்கொண்ட சபதம் என் தந்தையாருக்கு எதிரானதாக வல்லவா இருக்கிறது? தந்தையின் தொல்வியை ஒரு தனயன் எப்படிப் பொறுத்துக்கொள்ள முடியும்?' என்று கேட்டேன் நான. அதன் பிறகு அந்த நண்பன் என்னிடம் மாளிகையை விலைக்கு வாங்குவது பற்றி எதுவுமே கேட்க வில்லை . உடனடியாக என்னிடம் போவதற்காகச் சொல்லிக் கொண்டான். அப்போது நான் அவனை நோக்கி. 'நண்பா எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின்னால் இப்போதுதான் சந்திக்கிறோம். இப்படி நீ வந்தவுடன் புறப்பட்டுச் செல்வது சரியா? என்று கேட்டேன். அவனை என் இல்லத்தில் சில நாட்கள் தங்கிப் போக வேண்டுமென்று வற்புறுத்தினேன், ஆனால். அவன் மிகப் பிடிவாதமாகப் போக வேண்டுமென்று கூறினான். கடைசியில் நான் அவனிடம், நண்பா, என் மேல் வீண் கோபம்கொள்ளாதே. இருவரும் இருந்து நன்றாகக் கலந்து ஆலோசிப்போம். அதன் பிறகு மாளிகையை யார் வைத்துக் கொள்வது என்ற முடிவு செய்வோம்!” என்று சொன்ன பிறகுதான் அவன் என் மாளிகையில் விருந்தாளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/226&oldid=854342" இலிருந்து மீள்விக்கப்பட்டது