பக்கம்:மன ஊஞ்சல்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 217 யாகத் தங்க ஒப்புக்கொண்டான். என் நண்பனிடம் அவன் என்னைப் பிரிந்து சென்ற இடைக் காலத்தில் நடந்த நிகழ்ச்சி களைப் பற்றிக் கேட்டேன். தன் மனைவியின் கொடுமை தாங்கமாட்டாமல் வீட்டை விட்டு ஓடிப்போன என் நண்பன், நேரே சென்னைக்கு வந்து சிங்கப்பூரிலே, வெள்ளைக்காரத்துரை யொருவரிடத்திலே வீட்டுக்குக் காவல் சேவகனாகச் சேர்ந்து தன் வாழ்க்கையைத் தொடங்கினான். நல்ல கல்வியறிவும்: எல்லையில்லாத சிந்தனா சக்தியும், இனிய பண்பாடும். உயர்ந்த குணங்களும் உடைய என் நண்பன் அந்த வெள்ளைக்காரத் துரையின் அன்புக்குப் பாத்திரனானான். கடைசியில் அவருடைய கண்காணிப்பிலேயே மெல்ல மெல்ல மேல் நிலைக்கு உயர்ந்த என் அருமை நண்பன் அவருடைய ஆதரவாலும் உதவியாலும் தனக்கென ஒரு கம்பெனி யுடையவனாகி விட்டான். தளராத நெஞ்சும் அயராத உழைப்பும் கொண்ட என் நண்பன் தன் கம்பெனியை ஒழுங் காகவும் சிறப்பாகவும் நடத்தி மிக விரைவில் பெரும் பணக்காரனாகி விட்டான். அந்தப் பணத்தைக் கொண்டுதான் இப்போது என் மாளிகையை வாங்கவேண்டும் என்று துடியாய்த் துடித்தான். என் நண்பன் வந்து சேர்ந்ததிலிருந்து இரண்டு மூன்று நாட்களாக நாங்கள் இருவரும் மாளிகையைப்பற்றி மறுபடி யும் பேசவில்லை. ஆனால், நாங்கள் இருவரும் ஒன்றாகப் பழகத் தொடங்கியதும், எங்களுடைய பழைய நட்பு மறுபடி யும் உறுதியாகப் பற்றிக் கொண்டுவிட்டது. மீண்டும் உயிர் நண்பர்களாக நாங்கள் தொடர்பு கொள்ள ஆராம்பித்து விட்டதையுணர்ந்து விட்டோம். அதனால், ஒருவர்க்கொரு வர் விட்டுக் கொடுத்தும் உள்ளம் கலந்தும் பேச ஆரம்பித்தோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/227&oldid=854343" இலிருந்து மீள்விக்கப்பட்டது