பக்கம்:மன ஊஞ்சல்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 மன ஊஞ்சல் ஒரு நாள் நான் என் நண்பனிடம், “தண்பா, என் மாளிகையை விலைக்கு வேண்டுமென்று கேட்டாயே, அதை வாங்கி என்ன செய்யப் போகிறாய்? உன் மனைவி மக்களுக்குக் கொடுக்கப் போகிறாயா!' என்று கேட்டேன். இந்தக் கேள்வியைக் கேட்டவுடனே தான் என் நண்பன் சிந்திக்க முற்பட்டான். தன் மனைவி மக்கள் எப்படியிருப்பார்களோ, அவர்கள் குணம் எப்படி மாறியிருக்கிறதோ என்று அவன் தெரிந்து கொள்ளவேண்டும் என்றும்,அதன் பிறகுதான் தான் மாளிகை வாங்குவது பற்றி முடிவுக்கு வரவேண்டுமெனவும் முடிவுக்கு வந்தான். என் நண்பன் மறைமுகமாகத் தன் குடும்பத்தைப் பற்றி விசாரணைகள் நடத்தியபோது தன் மனைவியோ, மகனோ தன் அன்பைக் கவரக்கூடிய பண்புடையவர்களாக மாறி வர வில்லை என்பதை யறிந்து கொண்டான். அதற் கிடையில் இந்தத் தங்கத்தைப்பற்றி அவன்கேள்விப்பட்டான். தங்கம் என்ற ஒரு நல்ல பெண், அன்பும் அறிவும் பண்பும் குணமும் உடைய பெண்ணாக இருந்தும் வறுமை யில் வாடும் பெற்றோருக்குப் பாரமாக இருந்து வருவதைக் கேள்விப்பட்ட என் நண்பன், அப்படிப்பட்ட பெண், தன் சொத்துக்களை அனுபவிக்கட்டும் என்று சொல்லி என் கையிலே இந்த உண்டியல் சீட்டைக் கொடுத்து. நீங்கள் உங்கள் மாளிகையை இந்தப் பெண்ணுக்கு விற்பனைப் பத்திரம் எழுதிக் கொடுத்துவிடுங்கள் என்று சொல்லி விட்டான். அதன்படி தான் இப்பொழுது நாம் இந்த மாளிகையைத் தங்கத்துக்கு கிரயம் செய்து கொடுக்கக் கூடியிருக்கிறோம்’ என்று ஜமீந்தார் கூறினார். 'இல்லை, எல்லாம் பொய்! இது ஜமீந்தாரும் இந்த அண்ணாமலைப் பண்டிதரும் சேர்ந்து போடுகிற நாடகம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/228&oldid=854344" இலிருந்து மீள்விக்கப்பட்டது