பக்கம்:மன ஊஞ்சல்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 219 தான் ஏமாளியல்ல எனக்கு மாளிகையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்!' என்று வெறிபிடித்தவள் போல் கூவினாள் தங்கம். "தங்கம். வலியவருகிற சீதேவியை உதைத்துத் தள்ளாதே!' என்றார் அண்ணாமலைப் பண்டிதர். அப்போது, "ஜமீந்தார் ஐயா!' என்று ஒரு கரகரத்த பெண் குரல் கேட்டது. எல்லோரும் அந்தக் குரல் வந்த திசையில் திகைப்புடன் திரும்பிப் பார்த்தார்கன். ஏனென் றால் அந்தக் குரல் மிகவும் கடுரமாய் இருந்தது. ஜமீந்தாரையா, இப்போது உங்கள் நண்பர் எங்கேயிருக் கிறார்?' என்று சுந்தரேசனின் தாயார் குணவதியம்மாள் கேட்டாள். 'ஏனம்மா நீயார் அதைக் கேட்க?' என்று ஜமீந்தார் கேட்டார். "தொட்டுத் தாலிகட்டிய மனைவியையும், பெற். றெடுத்த பிள்ளையையும் வஞ்சிக்க நினைக்கின்ற அந்த மனுஷன் எங்கேயிருக்கிறார் என்று தான் கேட்கிறேன்.' என்றாள் குணவதியம்மாள். 'அம்மா, நீ யார்?' என்று மறுபடியும் கேட்டார் ஜமீந்தார், "நான்தான் உங்கள் கைலாயத்தின் மனைவி. இதோ இவன் தான் அவர் பெற்ற பிள்ளை' என்று சுந்தரேசனைக் காட்டிச் சொன்னாள் குணவதியம்மாள். "உங்களை யாரும் இங்கே யழைக்கவில்லையே?’ என்று கேட்டார் ஜமீந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/229&oldid=854345" இலிருந்து மீள்விக்கப்பட்டது