பக்கம்:மன ஊஞ்சல்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 13 "'என்னடி தங்கம் என்ன?’ என்று பதற்றத்தோடு கேட்டுக் கொண்டே மரகத அம்மாள் அவளை நோக்கினாள்: “இங்கே பாரம்மா!' என்று தங்கம் கட்டிக்காட்டிய இடத்தைத் தாய் நோக்கினாள். அது அந்த இளைஞனின் இடது கை. அந்த இடதுகை தோளில் துவங்கி மணிக்கட்டின் சற்றுக் கீழோடு முடிந்திருந்தது. அதற்கப்புறம் முழு உள்ளங் கையையோ அதில் அடங்கிய ஐந்து விரல்களையோ கான முடியவில்லை. பாதிவரை எரிந்து கரிந்து போன விறகுக் கட்டை யொன்றின் நுனியைப் போல அந்த இடது கையின் நுனிப் பாகம் விளங்கியது. "ஐயோ பாவம்' என்ற வார்த்தைகள் ஆயாசப் பெருமூச்சோடு மரகத அம்மாளின் வாயிலிருந்து வெளிப் பட்டன. இவ்வளவு அழகான பிள்ளை க்கு இப்படி ஒரு குறையா? என்று அவள் மனம் வருந் தியது . அதே எண்ணம் தான் தங்கத்தின் உள்ளத்திலும் தவழ்ந்து கொண்டிருந்தது. ஆண்டவன் படைப்பில் எதுவுமே பூரணத்துவம் அடைவ தில்லையோ?' என்று அவள் மனத்திலே ஐய வினா எழுந்து நின்றது. - - சிறிது நோத்திற்குப் பிறகு அந்த இளைஞன் மயக்கந் தெளிந்து கண்களை அகல விரித்து ச் சுற்றும் முற்றும் நோக் கினான். அவன் பார்வையிலே ஒரு விதமான மிரட்சி தோன்றியது. - - "நான் எங்கிருக்கிறேன்?" என்று பயந்துகொண்டே கேட்டான், - 'ஏன் தம்பி பயப்படுகிறாய்? நீ இங்கேதான் இருக் கிறாய். தைரியமாகப்பேசு' என்று மரகத அம்மாள் கூறினாள். "அந்த இராட்சசி போய் விட்டாளா? இன்னும் அங்கே தான் இருக்கிறாளா?’ என்று கேட்டான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/23&oldid=854346" இலிருந்து மீள்விக்கப்பட்டது