பக்கம்:மன ஊஞ்சல்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 மன ஊஞ்சல் 'யார் எங்களை அழைக்க வேண்டும்? உரிமையில்லாத இடத்திற்கா நாங்கள் வந்திருக்கிறோம்?' என்று மிடுக்காகவே கேட்டாள் குணவதியம்மாள். அவளையும் அவளுடைய பேச்சையும் பார்த்தபோது அவளை ஒரு பெண் என்று மதிக்கும்படியாக இல்லை. ஆனால் அவளுடைய உருவத்தைக் கண்டவர்கள் அவளிடம் இப்படிப்பட்ட கொடுமையான குணங்கள் இருப் பதைக் கண்டு வியப்படையாமல் இருக்க முடியாது, அவ்வளவு வயதான பின்னாலும், அவளுடைய அழகு மெருகு குலையாமல் இருந்தது. அவளுடைய சிவந்த மேனி யும், களை பொருந்திய முகமும், அதற்குமேல் அவள் செய்து கொண்டிருந்த அலங்காரங்களும் சேர்ந்து அவளை, ஒரு சுந்தராங்கினியாக்கிக் காட்டிக் கொண்டிருந்தன. ஆனால், இவ்வளவு மேன்மையான அழகுடைய அந்தப் பெண் மணிக்கு ஏன் இப்படிப்பட்ட கொடுர குணமும் கரகரத்த குரலும் அமைந்தது என்று எண்ணி வியப்படையாமல் இருக்க முடியவில்லை அங்கு கூடியிருந்தவர்களால். அழகு இருக்குமிடத்தே ஆபத்தும் இருக்கும் என்று சான்றோர் சொன்ன வாக்குக்குச் சரியான சான்றாக இருந்தாள் குணவதியம்மாள். - ஜமீந்தார் கருணாகரரிடம் அந்தப் பகுதி மக்கள் யாரும் கைகட்டி தலை வணங்கிப் பேசுவதுதான் வழக்கம். பெண் களோ அவர் எதிரில் நின்று பேசக் கூடத் துணிய மாட்டார் கள். அவ்வளவு மரியாதையாயிருந்தது. இதெல்லாம் ஜமீந்தார் விரும்பியதில்லை யென்றாலும், பரம்பரை பரம் பரையாக அவருடைய இல்லத்தினருக்கு அப்பகுதி மக்கள் இப்படிப்பட்ட ம்ரியாதைகளைக் காட்டி வந்தார்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/230&oldid=854347" இலிருந்து மீள்விக்கப்பட்டது