பக்கம்:மன ஊஞ்சல்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 221 பணிவாகப் பேசுகின்றவர்களையே மிகுதியாகக் கண்டு வந்த ஜமீந்தார் கருணாகரர். குணவதியம்மாளின் கடுகடுப் பான பேச்சைக் கேட்டதும் பிரமித்துப் போனார். இப்படி யும் ஒரு பெண் இருப்பாளா?” என்று திகைப்படைந்தார். கடைசியில் அவளை வாயடக்குவதற்காக, 'அம்மா, உன் கணவர் என்று நீ சொல்லுகிற அந்த மனிதர் சென்னையில் இருக்கிறார். ஆகவே, அவரிடம் போய் நீ கூற வேண்டிய வற்றைக் கூறிக்கொள்' என்றார். ஜமீந்தாரையா! என்னை ஏமாற்றி விடலாமென்று நீங்கள் எண்ணியிருந்தால் அது நடக்காது. அந்த மனிதர் இங்கே வந்திருக்கிறார் என்று எனக்குத் தெரியாதென்று நினைக்க வேண்டாம், அவர் எந்த உருவத்தில் எந்தப் பெய ரில் எங்கே மறைந்திருந்தாலும் நான் கண்டுபிடித்துவிடு வேன்' என்று குணவதியம்மாள் திடமான குரலில் கூறினார். இவள் ஏதோ கலாட்டாச் செய்ய வந்திருக்கிறாள் என் பதைக் கூட்டத்தில் இருந்தவர்கள் புரிந்துகொண்டார்கள். எவர் மனத்தையும் தன் பேச்சாலேயே மாற்றும் இயல்பு படைத்தவரான அண்ணாமலைப் பண்டிதர், இவளுக்குத் தகுந்த பதிலளித்து, அமைதிப்படுத்தாமல் இருக்கிறாரே என்று எண்ணினார்கள். அதே சமயம் குணவதியம்மாளும் அண்ணாமலைப் பண்டிதரை உறுத்துப் பார்த்தாள். கடுமையான அவளுடைய பார்வையைக் கண்டு அண்ணாமலைப் பண்டிதர் எவ்விதமான கவலையும் அடைய வில்லை. "குனவதி. பேசாமல் உட்கார்!’ என்று மிக உரிமை யுள்ளவர்போல் அதட்டலான குரலில் கூறினார். பிறகு அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/231&oldid=854348" இலிருந்து மீள்விக்கப்பட்டது