பக்கம்:மன ஊஞ்சல்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 மன ஊஞ்சல் கூடியிருந்த விருந்தினர்களை நோக்கி, 'அன்பர்களே, ஒரு காரியம் நடைபெறும்பொழுது அதைக் கெடுப்பதற்கென்றே வந்ததுபோல் இவள் இடையிட்டுப் பேசியதை நீங்கள் கண்டீர்கள். ஆனால், இவள் பேரில் குற்றமோ. தவறோ இருப்பதாக எனக்குப் படவில்லை.ஆனால், இவளுடைய பெயருக்கேற்ற குணம் இல்லாததால் வந்ததுதான் இவ்வளவும்!” என்றார். இதைக் கேட்டதும் குணவதியம்மாள், சுந்தரேசள் பக்கம் திரும்பி 'பாரடா! உன் அம்மாளைப் பற்றிப் பேசு வதைப் பார்த்துக்கொண்டிருக்கிறாயே!” என்று சொல்விப் புலம்பி அழத் தொடங்கி விட்டாள். 'கொஞ்சம் பொறு அம்மா ! என்னதான் நடக்கிற தென்று பார்க்கலாம்!' என்று அருவருப்பான குரலில் கூறி அவளை அடக்கினான் சுந்தரேசன் அவன் பார்வைமுழுவதும் தங்கத்தின் மேலேயே பதிந்திருந்தது. அவனுடைய சிந்தனை யில் ஏதேதோ திட்டங்கள் உருவாகிக் கொண்டிருந்தன. அண்ணாமலைப் பண்டிதர் தொடர்ந்து பேசினார். 'அன்பர்களே! ஜமீந்தார் கருணாகரர் அவர்கள் தம் நண்பரைப் பற்றிக் கூறிய கதையைக் கேட்டீர்கள். அந்த நண்பர், தம்முடைய மனைவி மக்களின் கொடுமை தாங்க மாட்டாமல்தான் வீட்டை விட்டு ஓடினார் என்று சொன் னார். இந்தக் குணவதியோ தான்தான் மனைவியென்று உரிமை கொண்டாடுகிறாள். இவள் எப்படிப்பட்டவள் என் பதையும் நீங்கள் ஓரளவு தெரிந்துகொண்டீர்கள், இப்படிப் பட்டவளோடு அவர் எப்படி வாழ முடியும்? இப்படிப் பட்ட வளுக்கு அவர் எப்படித் தன் சொத்தைக் கொடுக்க நினைப் பார், மேலும் அவர் தான் பெற்றெடுத்த மகனுக்காவது ஏதாவது கொடுக்கலாமாவென்று எண்ணினார். ஆனால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/232&oldid=854349" இலிருந்து மீள்விக்கப்பட்டது