பக்கம்:மன ஊஞ்சல்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 223 மூதாதையர் வழியாக அவருக்குக் கிடைத்த-தன் மனைவி யிள் பொறுப்பில் இருந்த ஏராளமான செல்வங்களையெல் லாம் கரைத்தவன் இந்த மகன் என்று தெரிந்து கொண்ட பின்னால், அவனுக்கு எப்படித் தன் சொத்தைக் கொடுக்க முன் வருவார். தன் தந்தையைத் தந்தையென்று தெரிந்து கொண்ட பின்னாலும் அவரிடம் அன்போ, மரியான தயோ பேருக்குக் கூடக் காட்டாதவனுக்கு, அவர் ஏன் தன் சொத்தைக் கொடுக்க வேண்டும் என்கிறேன்?' என்று கேட்டார் அண்ணாமலைப் பண்டிதர். இதைக் கேட்டதும் சுந்தரேசன் ஆவேசத்தோடு எழுந்து, 'எங்கள் உரிமையை நிலைநாட்ட வந்தோமே தவிர உங்கள் சொத்துக்காக இங்கே யாரும் ஓடி வரவில்லை. பெரிய சொத்துச் சேர்த்துவிட்டாராம் சொத்து! எல்லாம் நான் கோர்ட் மூலமாகப் பார்த்துக்கொள்கிறேன். வா. அம்மா போகலாம்!' என்று தன் தாயாரான குணவதியம்மாளின் கையைக் கரகர வென்று இழுத்துக்கொண்டு வெளியேறினான் சுந்தரேசன். குணவதியம்மாளோ, அங்கிருந்து போகப் பிரிய மில்லாதவளாயிருந்த போதிலும். தள் மகன் கோர்ட்டு மூலம் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிய தைரிய மொழிகளைக் கேட்டு, சரி, பிறகு பார்த்துக் கொள்வோம்' என்ற எண்ணத்துடன் அவனைத் தொடர்ந்து போனாள். 'போடா, போ! என் சொத்தில் உனக்கு ஒரு காலணாக் கூடக் கிடைக்காது. இது உன் பாட்டன் சம்பாதித்த சொத்தா யிருந்தால்தான் கோர்ட் மூலம் பெறலாம். அத்தனையும் நான் தானாகப் பாடுபட்டுச் சம்பாதித்த சொத்து' என்று உறுமினார் அண்ணாமலைப் பண்டிதர். அவர் கண்கள் கோவைப் பழம் போல் சிவந்து விட்டன. ஆத்திரத்தில் அவர் தாம் இவ்வளவு நேரமும் மறைத்து வைத்துப் பேசி வந்ததை மறந்துவிட்டார், தான்தான் அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/233&oldid=854350" இலிருந்து மீள்விக்கப்பட்டது