பக்கம்:மன ஊஞ்சல்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 மன ஊஞ்சல் தந்தையென்பதைக் காட்டிக் கொண்டுவிட்டார். இதை அவர் உணரவில்லை. ஆனால், மரகதம்மாள். "அண்ணாத நீங்கள்தானா? என்று ஓடிவந்து அவரைக் கட்டியனைத்துக் கொண்டதைக் கண்ட பிறகுதான் அவர் தன் தவற்றை யுணர்ந்தார். அண்ணாமலைப் பண்டிதர் தான் சித்திர நல்லூர் கயிலாயமா என்று அங்கு கூடியிருந்தவர் அனைவரும் வியப் படைந்தார்கள். அவர் தன் மாமன் என்பதையறிந்த தங்கம் அடைந்த வியப்புக்கு அளவேயில்லை. கந்தசாமி வாத்தியார், தாம் இவ்வளவு பழகியும் தம் மைத்துனரை இன்னார் என்று தெரிந்து கொள்ள வில்லையே என்று வருந்தினார். அதே சமயம் தன் அன்புக்கும் மரியாதைக்கும் மட்டுமல்லாமல் உறவுக்கும் உரியவராக அவர் இருப்பதை அறிந்ததால் ஆனந்த பரவசத்தில் மூழ்கினார். பிறகு அண்ணாமலைப் பண்டிதர் அங்கு கூடியிருந்தவர் களுக்குத் தன்னைப் பற்றி விளக்கமாகச் சொல்ல தொடங் கினார், நண்பர்களே! சிங்கப்பூருக்கு நான் சென்று வந்த கதையை ஜமீந்தார் அவர்கள் கூறினார்கள். நான் சிங்கப் பூரிலேயே தான் இருந்துவிட எண்ணினேன். ஆனால், பெரிய ஜமீந்தாரிடம் செய்த சபதத்தை நிறைவேற்ற வேண்டு மென்ற உறுத்தல் என் நெஞ்சில் இருந்து கொண்டிருந்தது. அதற்காகவேதான் இந்த நாட்டுக்குப் புறப்பட்டு வந்தேன். ஆனால், என் தோழர் கருணாகரர் கேட்ட கேள்வி தான் என்னை இவ்வாறு மாறு பெயரில் உலவச் செய்தது. 'தன்னந்தனியாளான உனக்கு ஏன் இத்தனை பெரிய மாளிகை?' என்று கேட்டார். அத்துடன், உன் மனைவி மக்களுடன் திரும்பவும் சேர்ந்து வாழ எண்ணமிருக்கிறதா?” என்றும் கேட்டார். r

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/234&oldid=854351" இலிருந்து மீள்விக்கப்பட்டது