பக்கம்:மன ஊஞ்சல்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 225 நான் சிந்தித்தேன். அவர்கள் திருந்தியிருந்தால், ஏன் அவர்களும் கூடிவாழக் கூடாது? என்று. ஆனால் அதையறிந்து கொள்ள நான் மறைமுகமாக வாழ்வதென்று முடிவு செய்தேன். மறைமுக மான வாழ்க்கையிலிருந்து நான் அவர்களைப் பற்றித் தெரிந்து கொண்ட செய்திகள் என் மனத்துக்குத் திருப்தி யளிக்கவில்லை. அதே சமயம் நான் என் தங்கை வீட்டைப் பற்றிக் கேள்விப் பட்டபோது அவர்கள் பெரும் வறுமையில் வாடுவதாக அறிந்தேன். நல்லவர்களான அவர்களுக்கு என் சொத்தை யளித்து நலமாக வாழச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ஜமீந்தார் அவர்களிடம் நான் அவர்களைப் பற்றிப் பேச்சு எடுத்தபோது, தங்கத்தைப் பற்றி குறிப்பிட்டேன். அவர்களும், ஜமீந்தாரிணியம்மாளும், தங்கத்தைப் பார்க்க விரும்பினார்கள். பிள்ளை குட்டியில்லாத ஜமீந்தார் அவர்கள், தங்கத்தை நேரில் சந்தித்து, அவளுடைய குண நலன்களை யறிந்து கொண்ட பின், தங்கத்திற்கு தன் மாளிகையைச் கம்மா கொடுக்கவே தயாராயிருப்பதாகக் கூறினார். ஆனால், நான் விலைக்குத்தான் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். அதன்படிதான் இந்த ஏற்பாட்டைச் செய்து முடித்தோம் . "தங்கம், உன் மாமனுடைய அன்பளிப்பாக இந்த மாளிகையை ஏற்றுக் கொள்ளச் சம்மதந்தானே?' என்று கேட்டார். அண்ணாமலைப் பண்டிதர். தங்கம் வெட்கத்தோடு தலைகுனிந்து பேசாம லிருந்தாள். X

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/235&oldid=854352" இலிருந்து மீள்விக்கப்பட்டது