பக்கம்:மன ஊஞ்சல்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 மன ஊஞ்சல் 'அண்ணா, ஜமீந்தாரையா காலத்திற்குப் பிறகு வேண்டுமானால், இந்த மாளிகையை வாங்கிக்கொள்ளலாமே இப்போது வேண்டாம்.’’ என்று மெதுவாகக் கூறினாள் மரகத அம்மாள். இது ஜமீந்தார் கருணாகரர் காதில் விழுந்து விட்டது. 'மரகதம், நான் பரம்பரையாக இருந்து வந்த மாளிகையை விட்டு வெளியேற்றப் படக்கூடாதென்று சொல்லுகிறாள் போலிருக்கிறது! அதைப் பற்றிக் கவலையில்லை. உள்ள படியே நான் இந்த மாளிகையை விற்றுவிட்டு ஒரு தொழிற் சாலை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் திட்டமிட்டுக் கொண்டிருந்தேன். அதற்குத் தோதாகக் கயிலாயமும் வந்த சேர்ந்தான்!' என்று சொல்லி மரகத அம்மாளுடைய மனச் சஞ்சலத்தைத் தீர்த்துவைத்தார் ஜமீந்தார். பிறகு அவர்கள் ஊர்ப் பெரியவர்கள், அம்பலகாரர் இன்ஸ்பெக்டர், வழக்கறிஞர் ஆகியோர் முன்னிலையில் தங்கத்தின் பெயருக்கு அந்த மாளிகையைக் கிரயம் செய்து கொடுத்து, கிரயப் பத்திரத்தை நீதி மன்றத்தில் பதிவு செய்து கொடுக்கும்படி வழக்கறிஞரிடம் கொடுத்தார்கள். விருந்தினர்கள் எல்லோரும் மாலைச் சிற்றுண்டிக்குப் பின் விடை பெற்றுக் கொண்டு தத்தம் வீடுசென்றார்கள். ஜமீந்தார் மாளிகையில் நடந்த அதிசய நிகழ்ச்சி பற்றியே அந்த வாரம் முழுவதும் ஊரெங்கும் பேச்சாயிருந்தது. மாலையில், தங்கமும் ராதாவும் மாளிகையைச் சுற்றிலு முள்ள தோட்டப் புறத்திற்குச் சென்றார்கள். இருவரும் போய்ப் புல் தரையில் உட்கார்த்த பிறகு தங்கம் ராதாவை நோக்கிக் கேட்டாள். "ராதா எல்லாம் ஒரு கனவு போல் இல்லையா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/236&oldid=854353" இலிருந்து மீள்விக்கப்பட்டது