பக்கம்:மன ஊஞ்சல்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 227 "ஆம்! தங்கம்! என்னால் இப்போது நடந்த நிகழ்ச்சி களையே நம்ப முடியவில்லை. யாரோ ஒரு பண்டாரம் போல் இருந்த பண்டிதர் இப்படித் திடீரென்று பணக்கார ரானார் என்ற செய்தி எனக்கு தம்பமுடியாததாகத் தோன்று கிறது. அவர் சிங்கப்பூருக்குப் போய் வந்ததாக எனக்குத் தோன்றவில்லை!’ "அப்படியானால்... ?” "அவர் உன் மாமனாக இருக்கக் கூடும் என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால், அவரே சம்பாதித்ததாக இந்தப் பொருள் இருக்குமா என்பது தான் என் சந்தேகம். ஜமீந்தார் தான் அவர்மேல் உள்ள அன்பு காரணமாக இந்த மாளிகையைச் சும்மாவே கொடுத்துவிட்டார் என்று நான் நினைக்கிறேன்' என்றாள் ராதா. "ராதா எல்லாம் எனக்கு ஒரே குழப்பமாயிருக்கிறது! எது பொய் எது உண்மை என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த அண்ணாமலைப் பண்டிதர் என்னிடம் அன்பாக நடந்து கொள்ளவில்லை என்பதை நான் கண்டிருக் கிறேன். ஆனால், அவர் உள்ளத்தில் அன்பிருந்ததா இல்லையா என்று நான் எப்படித் தெரிந்திருக்க முடியும். ஜமீந்தாரும் ஜமீந்தாரிணியம்மாளும் காட்டிய அன்பை யெல்லாம் நினைத்துப் பார்த்தால், அப்போது அவை போலி அன்பு போலத் தான் தோன்றின. ஆனால், இன்று நடந்த நிகழ்ச்சிகளைப் பார்த்தால், அது உண்மையான அன்பாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்க வேண்டியிருக்கிறது. எல்லாம் போகட்டும், சுந்தரேச அத்தானுக்கு இப்படி ஒரு தாயார் வாய்த்திருக்க வேண்டாம்!” என்றாள் தங்கம். "அப்படி ஒரு மனைவியும் வாய்த்திருக்க வேண்டாம்" என்று தொடர்ந்தாள் சாதா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/237&oldid=854354" இலிருந்து மீள்விக்கப்பட்டது