பக்கம்:மன ஊஞ்சல்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 மன ஊஞ்சல் 'சுந்தரேச அத்தான் நல்லவர்தான். அவருடைய தாயாரும் மனைவியும் தான் அவரைக் கெட்டவராக்கி விட்டார்கள் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.' என்றாள் தங்கம். 'ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் விருப்பத்தைக் கவர்ந்தவர் நல்லவராகத்தான் தோற்றமளிப்பார்!" என்று ராதா சொன்னாள். "ராதா, கேலியா செய்கிறாய்?" என்று கேட்டாள் தங்கம். ராதா பதிலளித்தாள். 'இல்லை, உண்மையாகத் தான் சொல்கிறேன். அந்த சுந்தரேசனைப் பார்த்ததிலிருந்தே எனக்குப் பிடிக்கவில்லை. ஆள் என்னவோ அழகாக இருக்கிறாரே தவிர, கொஞ்சங்கடப் பண்பில்லை. பெண்களை வசப்படுத்தப் படித்திருக்கிறாரே தவிரப் பெரியோர்கள் முன்னிலையில் பணிவாக நடக்கவே பழகவில்லை. அவர் இதயத்தில் அன்புக்கு இடமில்லை என்பது நன்றாகத் தெரிகிறது. பணம் பணம் செலவுக்குப் பனம்! இதே குறிக்கோளாகத் தான் இருப்பார் டோலிருக் கிறது. அவர் உங்கள் வீட்டிற்கு வந்திருந்தது கூட அந்த அண்ணாமலைப் பண்டிதரை உளவறிவதற்காகத்தான் இருக்கும். அண்ணாமலைப் பண்டிதர்தான் தன் தந்தை கயிலாயமாக இருக்கவேண்டும் என்று சந்தேகப்பட்டு அவரை நோட்டம் பார்க்கவே அவர் அங்கு வந்திருக்கவேண்டு மென்றே எனக்குத் தோன்றுகிறது! தங்கம், நீ அவரை மறந்துவிடுவதுதான் நல்லது!' என்று சொன்னாள் ராதா. "ராதா, உண்மையாகத்தான் பேசுகிறாயா?" அவர் நல்லவரில்லையா?' என்று திகிலோடு கேட்டாள் தங்கம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/238&oldid=854355" இலிருந்து மீள்விக்கப்பட்டது