பக்கம்:மன ஊஞ்சல்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LQ窃T ஊஞ்சல் 24. காட்டுப் பிள்ளையார் கோயில் தன் அத்தான் நல்லவரல்ல என்று கேள்விப்பட்ட தங்கத்திற்கு வருத்தமாயிருந்தது. ஆனால், ராதா தான் கூறிய செய்தியை மீண்டும் உறுதிப்படுத்திப் பேசினாள். "ஆம்! முன்னெல்லாம் அவரைப் பார்த்தபோது எனக்கு இந்த எண்ணம் ஏற்படவில்லை. இப்போது அவருடைய தாயாருடன் அவரைச் சேர்த்துப் பார்த்த போதுதான். அவர் இப்படிப்பட்டவராய் இருக்கவேண்டும் என்று தோன்றியது. மேலும் ஊரில் ஒருவர் கூட அவரைப்பற்றி நல்லெண்ணத்தோடு பேசவில்லை. அவரும் அவர் தாயாரும் ஒரே மாதிரி. அவருடைய தாயார் எவ்வளவு அழகாயிருக் கிறாளோ அவ்வளவு கொடிய நெஞ்சினளாக இருக்கிறாள். அவள் மகனும் அப்படித்தான். ஆள் பார்க்க அழகாகத் தான் இருக்கிறார். ஆனால் கொஞ்சம் கூடப் பண்பாடு என்பதேயில்லை. தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை என்ற சொல் இவர்கள் விஷயத்தில் நூற்றுக்கு நூறு அப்படியே பொருந்தும்' என்று வெறுப்போடு கூறினாள் ராதா. தங்கம் அன்று வரவேற்புக்கூடத்தில் சுந்தரேசன் நடந்து கொண்ட முறைகளைத் தன் மனத்தகத்தே கொண்டு வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/239&oldid=854356" இலிருந்து மீள்விக்கப்பட்டது