பக்கம்:மன ஊஞ்சல்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 மன ஊஞ்சல் "என்ன தம்பி சொல்கிறாய்?' என்று விளங்காமல் கேட்டாள் மரகத அம்மா. 'நான் மல்லிகையரும்பு பறிக்க வந்தேனே, அப்போ ஒரு இராட்சசி என்னை விரட்டிக்கிட்டு வந்தாளே, அவ இன்னும் அங்கே தான் இருக்கிறாளா?’ என்று திரும்பவும் கேட்டான். தன்னைப் பார்த்தால் அவனுக்கு இராட்சசி போலவா தோன்றுகிறது என்று மனத்திற்குள் சிணுங்கிக் கொண்டாள் தங்கம். “என்ன தம்பி உள று கி ற ர ப் ? இராட்சசியாவது, விரட்டுவதாவது?’ என்று கேட்டாள் மரகத அம்மா. 'இல்லேம்மா. கமலம் அப்படித் தான் சொன்னாள். அவள் சொன்னபடியே இராட்சசி என்னை விரட்டிக் கொண்டு வந்தாள்' என்றான் அவன். மண்டையில் அடிபட்டதால் அவன் குழம்பிப் பேசு கிறான் என்று நினைத்தாள் மரகத அம்மா. ஆனால் தன்னை அவன் இராட்சசி என்று குறிப்பிட்டது தங்கத்திற்கு மிகவும் உறுத்தலாயிருந்தது. கமலம் என்ற பெண்ணைப்பற்றி அவள் கேள்விப்பட்டிருக்கிறாள். ஒரு பெண்ணுக்கு வேண்டிய அடக்க ஒடுக்கங்கள் எல்லாம் அந்தக் கமலத்திடம்கிடையாது. பெரிய குறும்புக்காரி. யாரையாவது வம்புக்கிழுப்பதும், யாரிடையேயாவது சண்டை மூட்டி விடுவதும், கோள் சொல்வதும் கமலத்தின் உடன்பிறந்த பழக்க வழக்கங்கள், தன்னைப்பற்றி அந்த இளைஞனிடம் மோசமாகச் சொல்லி யிருக்க வேண்டுமென்று அவளுக்குத் தோன்றியது. "இதோ, பாருங்கள். என்னையா இராட்சசியென்று சொன்னாள்?’ என்று கேட்டு அவனை உற்று நோக்கினாள் தங்கம். அவனும் தங்கத்தை உற்று நோக்கினான். 'ஐயையோ! நீ எவ்வளவு அழகாயிருக்கிறே? உன்னைப் பார்த்து யாராவது இராட்சசி என்று சொல்வார்களா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/24&oldid=854357" இலிருந்து மீள்விக்கப்பட்டது