பக்கம்:மன ஊஞ்சல்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 - . மன ஊஞ்சல் நிறுத்திப் பார்த்தாள். ராதா சொல்வதெல்லாம் உண்மை யாக இருக்கும்போலத் தோன்றியது. அடுத்த கணம் அவன் தன்னையே கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்ததை எண்ணிப் பார்த்தாள். அவன் தன்மீது கொண்டுள்ள பற்று இன்னும் குறையாதிருப்பதுபோல் தோன்றியது. ஊருக்கெல்லாம் அவன் கெட்டவன்! ஆனால், தனக்கும் அவன் கெட்டவன் தானா? தன்னிடத்தில் நல்லவனாக நடந்து கொள்ள மாட்டானா? தன்னால் அவனுடைய வாழ்விலே ஒரு மாற்றத்தை யுண்டுபண்ணமுடியாதா? இவ்வாறு குழம்பிக் கொண்டிருந்தது அவள் நெஞ்சு. 'தங்கம், இந்தத் தோட்டத்தில் எந்த இடத்தில் மல்லிகைக் கொடி கொண்டுவந்து நடப்போகிறாய்?’ என்ற கேள்வியைக் கேட்டு இரண்டு பெண்களும் திரும்பிப் பார்த்தார்கள். அந்தக் கேள்வி ஒரு பெண்ணின் மென்மை யான ஆனால் தளர்ந்த குரலாயிருந்தது. வந்த பெண்மணி யைக் குறித்து, 'இது யார் தங்கம்?' என்று கேட்டாள் ராதா, Y・ 'ஜமீந்தாரிணி பெரியம்மாள்' என்று தங்கம் சொன்னாள். ஜமீந்தாரிணியம்மாள் அவர்களின் அருகில் வந்து சேர்ந்தாள், ஜமீந்தாரிணியம்மாளைக் கண்டதும் இரு பெண்களும் எழுந்து நின்று அவளை வரவேற்று மரியாதை செய்தார்கள் ஜமீந்தாரிணி பெரியம்மாள் அவர்களை மீண்டும் அமரச் சொல்லிவிட்டுத் தானும் புல் தரையின்மீது உட்கார்ந்தாள். 'தங்கம், இனிமேல் இந்த மாளிகை உனக்குச் சொந்த மாகிவிட்டது. ஆகையால் நீ இங்கேயே ஒரு மல்லிகைப் பந்தல் உண்டாக்கி வைத்துக்கொண்டால்தான். அடிக்கடி பழைய வீட்டு நினைவு வராமல் இருக்கும்!” என்று பெரியம்மாள் கூறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/240&oldid=854358" இலிருந்து மீள்விக்கப்பட்டது