பக்கம்:மன ஊஞ்சல்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 231 'ஏனம்மா, புதிதாக வைக்கிற இந்த மல்லிகைப் பந்தலைப் பார்த்தவுடன், அந்தப் பழைய மல்லிகைப் பந்தல் நினைவு வந்து பழைய வீட்டு நினைவும் வந்துவிடாதா? என்று இடைமறித்துக் கேட்டாள் ராதா, 'இவள்யாரடி? பெரியகுறும்புக்காரியாக இருக்கிறாள்?’’ என்று பெரியம்மாள் கேட்டாள். 'என் தோழி ராதா, பக்கத்து வீடு' என்று அறிமுகப் படுத்தி வைத்தாள் தங்கம். 'இவளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டால், வேறு எந்த நினைவும் வராது போலிருக்கிறதே!' என்று ஜமிந்தாரிணி பெரியம்மாள் கூறியதும் தங்கம் வாய்விட்டுச் சிரித்துவிட்டாள். *.. சிரித்துக் கொண்டிருந்த தங்கம் சட்டென்று அடக்கிக் கொண்டு, 'ஏண்டி ராதா, நீயும் இங்கேயே வந்து இருந்து விடேன்' என்று கேட்டாள். ‘'எத்தனை நாளைக்கு அவள் உன் கூடவே இருக்க முடியும். அவளுக்குக் கலியாணம் ஆகிக் கணவன் வீட்டுக்குப் போக வேண்டாமா என்ன? என்று ஜமீந்தாரிணியம்மாள் கேட்டாள். இதற்கு அந்த இரண்டு பெண்களும் எவ்விதமான பதிலும் அளிக்கவில்லை. பிறகு அங்கு சிறிது நேரம்வரை அமைதி சூழ்ந்திருந்தது. அமைதியைக் கலைத்துக் கொண்டு அங்கு வந்த தோட்டக்கார சுப்பையா, தங்கம்மா, உங்களைப் பண்டிதரையா கூப்பிடுகிறார்கள்' என்று சொன்னான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/241&oldid=854359" இலிருந்து மீள்விக்கப்பட்டது