பக்கம்:மன ஊஞ்சல்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 மன ஊஞ்சல் தங்கம் எழுந்து, ஜமீந்தாரிணியம்மாளின் அனுமதியுடன் சுப்பையாவைத் தொடர்ந்து சென்றாள். அதேசமயம், தோட்டத்து மரஞ்செடிகளிடையே சலசலப்பு ஏற்பட்டது யாரோ ஒருவன் குனிந்து ஓடுவது போல் தெரிந்தது. ஜமீந்தாரிணியம்மாள் திகிலடைந்து, யாரது? சுப்பையா பார்!’ என்று கத்தியவுடன், சுப்பையா அந்த மனிதனைத் தொடர்ந்து ஓடினான். ஆனால், சுப்பையா அவனைச் சரிவர அறிந்து கொள்வதற்குள் அவன் வாசற் கதவு தாண்டி நெடுந்துாரம் ஓடிவிட்டான். சுப்பையா திரும்பவந்து தகவல் சொல்வதற்குள் அவர்கள் எல்லோரும் மாளிகைக்குள் வந்து சேர்ந்து விட்டார்கள். தங்கம் அண்ணாமலைப்பண்டிதர் இருந்த அறைக்குச் சென்றாள் அங்கு அண்ணாமலைப் பண்டிதர் மட்டுமே யிருந்தார். தங்கம் அவரிடம் அஞ்சி அஞ்சிக் கொண்டே மெல்லச் சென்றாள். Asa "தங்கம், வா அம்மா!' என்று அழைத்த அண்ணாமலை பண்டிதரின் வார்த்தைகளில் இதற்கு முன் எப்போதுமே காணப்படாத கனிவு இருந்தது. அந்தக் கனிவு தங்கத்திற்குப் புதிய மன உணர்ச்சியைஅன்பு கலந்த ஒருவிதமான பற்றுதலை-அவர்பால் ஏற்படுத்தக் கூடிய சக்தியுடையதா யிருந்தது. தங்கம் வந்தவுடன் அருகில் இருந்த ஆசனத்தில் அமரச் சொல்லிய பண்டிதர், அவளைக் கூர்மையாக உற்று நோக்கியபடி, "தங்கம், உன் மனம் வருந்தும்படி நான் நடந்திருந்தால் அதை மன்னித்து மறந்துவிடுவாயா!' என்று கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/242&oldid=854360" இலிருந்து மீள்விக்கப்பட்டது