பக்கம்:மன ஊஞ்சல்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 233 உடனே தங்கம் பதறியெழுந்து அவர் காலைப் பிடித்துக் கொண்டு "ஐயோ மாமா அப்படியெல்லாம் சொல்லா தீர்கள்!' என்று துயரத்தோடு கூறினாள். 'தங்கம், நான் எதற்காக உங்களிடம் எல்லாம் உண்மையைச் சொல்லாமல் இருந்தேன் தெரியுமா?’ என்று கேட்டார் பண்டிதர். தங்கம் அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதையே ஆவலுடன் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தாள். 'தங்கம், நான் என் வாழ்க்கையிலே சுகத்தைக் கண்ட தில்லை. அன்புக்கினியவளாகியiஒரு மனைவியை அடைந்தும் நான் என் ஆசையின் காரணமாக அவளுடன் இருந்து வாழ்க்கை நடத்தாமல் கெடுத்துக் கொண்டேன். பாதகி யான ஒருத்தியை இரண்டாவதாக மணம்புரிந்து கொண்டு என் வாழ்க்கையை நச்சுக் குழியில் வீழ்த்திக்கொண்டேன். அந்தக் குழியினின்றும் தப்பி அயல்நாடு சென்றவன், வாழ்க்கையில் ஒரு சுகத்தையும் காணவில்லையென்றாலும், வாழ்க்கையைச் சுகப்படுத்தக்கூடிய செல்வத்தைச் சேர்த்துக் கொண்டு வந்துவிட்டேன். இனி, இந்த செல்வத்தை யெல்லாம் நான் அனுபவிக்க முடியாது. ஏனென்றால் எனக்குக் காலம் நெருங்கிவிட்டது' என்று சொல்லிக் கொண்டே வரும்போது, 'அப்படிச் சொல்லாதீர்கள் மாமா! நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து சீரும் சிறப்புமாய் இருக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் எல்லோரும் ஆனந்த மாக இருப்போம்!' என்று சொன்னாள் தங்கம். 'தங்கம் உனக்கு நல்ல மனசு, அதனால்தான் சாகம் போகிற என்னையும் வாழ்த்துகிறாய். இருக்கட்டும் நான் சொல்வதைக் கேள். நான் இன்னும் நெடுநாள் இருக்கப் போவதில்லை. அதற்குமுன் நான் பாடுபட்டுச் சேர்த்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/243&oldid=854361" இலிருந்து மீள்விக்கப்பட்டது