பக்கம்:மன ஊஞ்சல்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 மன ஊஞ்சல் சொத்தெல்லாம், நல்லவர் கையிலே சேர்ந்து அவர்கள் நன்றாக வாழ்வதைப் பார்த்துவிட்டுச் சாக வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதற்காகத் தான் உன் பெயருக்கு இந்த மாளிகையைக் கிரயம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்தேன். இனிமேல் பாங்கியில் உள்ள என் பணத்தை யெல்லாம் உன் பெயருக்கு மாற்ற வேண்டிய வேலையொன்று பாக்கியிருக்கிறது. அதைச் செய்து முடித்துவிட்டு உனக்கும் ஒரு திருமணத்தைச் செய்து வைத்து விட்டால் அப்புறம் நான் நிம்மதியாகச் சாவேன். தங்கம், நான் உன் மாமன் அல்லவா? உனக்குத் தகுந்த மாப்பிள்ளை தேடித்தர வேண்டியது என் பொறுப்பல்லவா? ஏன் தங்கம், நான் சொல்லுகிற மாப்பிள்ளையை நீ திருமணம் செய்து கொள்வாயா?’ என்று கேட்டார் கயிலாயம். அவர் என்ன சொல்லப் போகிறார்? யாரையாவது மனத்திற்குள் முடிவு செய்து வைத்துக் கொண்டு தான் பேசுகிறாரா என்பது தெரியாமல் தங்கம் திகைத்தாள். தங்கத்திற்கு யாராக இருந்தாலும், தன் விருப்ப மில்லாமல் ஒருவருக்குத் தான் கட்டிக் கொடுக்கப் படுவ தென்பது பிடிக்கவில்லை. அது பொம்மைக் கலியாணம் என்பது அவள் நினைப்பு. இன்னும் எத்தனையாண்டுகள் ஆனாலும், தனக்கு பிடித்தமாக உள்ள மாப்பிள்ளையைத் திருமணம் செய்து கொள்வது என்று அவள்.உறுதிபூண்டிருந் தாள். ஆனால், அத்தான் சுந்தரேசனைப் போல் யாரேனும் தன் இதயத்தில் இனி இடம் பெற முடியுமா என்பது அவளுக்குச் சந்தேகமாகவே யிருந்தது. இப்படியெல்லாம் ஒடிக் கொண்டிருந்த மனக்குதிரையின் பின்னாலேயே தங்கத் தின் எண்ணெங்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தன. அதை ஓரளவு யூகித்துணர்ந்த அண்ணாமலைப் பண்டிதர். "தங்கம், உன்னுடைய மனக்கருத்துக்கு விரோதமாக நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/244&oldid=854362" இலிருந்து மீள்விக்கப்பட்டது