பக்கம்:மன ஊஞ்சல்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 235 மாப்பிள்ளை யாரையும் கொண்டுவந்து நிறுத்தி விடுவேன் என்று நீ பயப்பட வேண்டாம். ஆனால், நான் சாவதற்கு முன்னால் நீ திருமணம் செய்துகொண்டு நலமாகஇருப்பதைப் பார்த்து விட்டுச் சாகவேண்டும் என்பதுதான் என் ஆசை!” என்று கூறினார். தங்கம் ஒன்றும் பதில் சொல்லாமல் இருந்தாள். தங்கம், சுந்தரேசனிடம் காதல் கொண்டிருந்தவள் என்பது அண்ணாமலைப் பண்டிதருக்கு ஏற்கனவே தெரியும்: ஆகையால், சுந்தரேசனைத் தவிர வேறு யாரையும் மனத்தாலும் நினைப்பதில்லை என்று முடிவு கட்டியிருக் கிறாளோ என்னவோ என்ற எண்ணமும் அவருக்கு ஏற்பட்டது போலிருக்கிறது. அதையும் தெளிவு படுத்திக் கொள்வதற்காக அவர் அந்தக் கேள்வியையும் கேட்டு வைத்தார். "தங்கம், திருமணமே வேண்டாம் என்று வைராக்கியம் ஏதாவது வைத்திருக்கிறாயா?” அண்ணாமலைப் பண்டிதரின் கேள்வியைக் கேட்டுத் தங்கம் மென்மையாகப் புன்னகை புரிந்தாள். அந்த மென்மையான புன்னகையைக் கொண்டே அவளுடைய மனக்கருத்தையும் புரிந்து கொண்ட அண்ணாமலைப் பண்டிதர் தம் சந்தேகம் சரியானதல்ல என்று முடிவு செய்து கொண்டார். "தங்கம், அடுத்த வாரம் நாம் சென்னைக்குப் போக வேண்டும். அங்கே போய் ஆகவேண்டிய காரியங்களை முடித்துக் கொண்டு திரும்பி வர ஒரு மாதம் ஆகலாம். ஆதலால் நீ வருகிற வெள்ளிக்கிழமையன்று சென்னைக்குப் புறப்படத் தயாராயிரு!" என்று கூறினார். தங்கம், இது வரை சென்னைக்குச் சென்றது கிடையாது. இப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/245&oldid=854363" இலிருந்து மீள்விக்கப்பட்டது