பக்கம்:மன ஊஞ்சல்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 மன ஊஞ்சல் செல்லவேண்டும் என்று அவர் கூறியதும் அவளுக்கு அது மகிழ்ச்சி தருவதாகவேயிருந்தது. ஆனால், தன் தாய் தந்தையரைப் பிரிந்து ஒருமாதம் வரை எப்படி இருக்க முடியும் என்று அவளுக்கு மலைப்பாயிருந்தது. ஆனால் அண்ணாமலைப் பண்டிதர் தொடர்ந்து சொன்ன சொற்கள் அவளுடைய மலைப்புணர்ச்சியை விலக்கி விட்டன. "மரகதமும் சென்னைக்கு வந்ததில்லை. அவளையும் கூட்டிக் கொண்டு போவோம். உன் தோழி ராதாவும் வேண்டு மானால் வரட்டுமே!’ என்றார். கயிலாயம் கடைசியாகச் சொன்ன கருத்து தங்கத்துக்கு நிரம்பப் பிடித்திருந்தது. சென்னையில் புதிதுபுதிதாகத் தான் காணப் போகும் காட்சிகளைப் பற்றிக் கருத்துப் பரிமாறிக் கொள்ள ராதா இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்! அதன் பிறகு தங்கம், கயிலாயத்தினிடமிருந்து மீண்டு வந்து மற்றவர்களோடு கலந்துகொண்டாள். தங்கம் மகிழ்ச்சி நிறைந்த முகத்தோடு வந்ததைக் கண்ட ராதா, அவள் மாமனிடம் போய் வந்த காரியத்தை அறிந்துகொள்ள ஆவலுடையவள்போல் அவளை நோக்கி னாள். தங்கமும் ராதாவைக் கைகாட்டி அழைத்தாள். இருவரும் ஒரு மூலைக்குச் சென்றவுடன், தங்கம் நடந்த பேச்சுக்களைக் கூறி, ராதாவையும் தன்னுடன் சென்னைக்கு வரும்படி அழைத்தாள். ராதா தன் தந்தையிடம் அனுமதி வாங்கிக்கொண்டு வருவதாகக் கூறினான். மறுநாள் காலையில் ராதா, நெய்யூருக்குத் திரும்பி விட்டாள். ஜமீந்தாரும் ஜமீந்தாரிணியம்மாளும்கூடச் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/246&oldid=854364" இலிருந்து மீள்விக்கப்பட்டது