பக்கம்:மன ஊஞ்சல்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 237 ஜமீந்தார் புறப்படும்போது, 'தங்கம், எனக்குப் பிள்ளை குட்டி கிடையாது. நீதான் என் மகள்போல். உனக்கு இந்த மாளிகையை இனாமாகக் கொடுக்க வேண்டும் என்று எண்ணினேன். ஆனால், கயிலாயம் விடவில்லை. இருந்தாலும் நீயே என் வாரிசாக இந்த மாளிகையில் இருந்து நலம் பல பெற்று வாழ வாழ்த்துகிறேன்!” என்று உருக்கமாகக் கூறி விட்டுச் சென்றார். மாளிகையில் இருந்த வேலைக்காரர்களில் பல பேரைக் காரியக்காரர் அனுப்பி வைத்துவிட்டார். தேவையான நாலைந்து பேரை மட்டும் வைத்துக்கொள்ள அண்ணாமலைப் பண்டிதரிடம் அனுமதி கேட்டுப் பெற்றுக் கொண்டார். தோட்டக்காரச் சுப்பையா உட்பட ஐந்து வேலைக்காரர் களும், அண்ணாமலைப் பண்டிதர், கந்தசாமி வாத்தியார். மரகத அம்மாள். தங்கம் ஆகியோரும் தான் மாளிகையில் இருந்தார்கள். பொழுது மெல்லெனப் போய்க் கொண்டிருந்தது. பெரியவர்கள் ஏதேதோ வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள். தங்கத்திற்கு அங்கே பொழுது போவதே அரிதாயிருந்தது. மாலைப் பொழுது வந்ததும் அவள் மாளிகைக்குள் இருக்க முடியாமல் தோட்டப் புறமாக வெளிக்கிளம்பி வந்தாள். அங்குள்ள மரஞ்செடிகளை ஒவ்வொன்றாகக் கவனித்து கொண்டே வந்து கடைசியில் புல்தரையில் உட்கார்ந்தாள். அப்போது திடீரென்று அவள்முன் வந்து நின்றான் சுந்தரேசன். - சுந்தரேசன் எங்கிருந்து வந்தான் எப்படி வந்தான் எதற்காக வந்தான் என்பது தெரியாமல் திகைத்துப் போய் அவனை நிமிர்ந்து நோக்கிய தங்கத்தை நோக்கி, 'தங்கம், உடனே புறப்படு! சீக்கிரம், சீக்கிரம்' என்றான் சுந்தரேசன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/247&oldid=854365" இலிருந்து மீள்விக்கப்பட்டது