பக்கம்:மன ஊஞ்சல்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 மன ஊஞ்சல் "அத்தான், எங்கே புறப்படச் சொல்கிறீர்கள்? எனக் கொன்றும் புரியவில்லையே! என்றாள் தங்கம். 'விளக்கமெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க நேரமில்லை. எல்லாம் பிறகு சொல்கிறேன். சீக்கிரம் வா என்னோடு!" என்று சொன்ன சுந்தரேசன் தங்கத்தின் பதிலை எதிர் பாராமல் அவள் கையைப் பிடித்து இழுத்தான், "என்ன அத்தான் இது கையை விடுங்கள்!” என்று கதறினாள் தங்கம். அடுத்த கணம், தங்கத்தின் வாயை தனது வலது கையால் மூடியபடி இடது கையால் தோளில் சாய்த்துத் தள்ளிக்கொண்டு சென்றான். தோட்டத்தின் பின் வாசல் கதவு முன்னேற்பாடாகத் திறந்து வைக்கப்பட்டிருந்தது. அதன் வழியாகத் தங்கத்தைத் தள்ளிக்கொண்டு வந்த சுந்தரேசன், அங்கு தயாராகக் காத்துக்கொண்டிருந்த ஜீப் வண்டியில் அவளை ஏற்றினான். அவளை ஏற்றி விட்டுவிட்டு அவனும் வண்டியில் ஏறிக் கொண்டவுடன், ஜீப் வண்டியின் ஒட்டும் ஆசனத்தில் உட்கார்ந்திருந்த இன்னொரு மனிதன், வண்டியை ஒட்டிச் சென்றான். இதில் ஏதோ சூது இருக்கிறது என்பதை யுணர்ந்த தங்கம், ஓடும் ஜீப்பிவிருந்து குதித்துவிட வேண்டுமென்ற எண்ணத்துடன், திடுதிப்பென்று ஜீப்பின் ஒரத்தை நோக்கி நகர்ந்தாள். ஆனால், சுந்தரேசன் ஏமாந்தவனாக இல்லை. விருட்டென்று தங்கத்தைப் பற்றியிழுத்தான். அந்த வேகத்தில் பின்புறம் சாய்ந்த தங்கத்தின் தலை ஜீப்பின் பின் விளிம்பில் அடிபட்டு அப்படியே அவளை மயக்கமடையச் செய்துவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/248&oldid=854366" இலிருந்து மீள்விக்கப்பட்டது