பக்கம்:மன ஊஞ்சல்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம் ைஊஞ்சல் 239 இது சுந்தரேசனுக்கு வசதியாகப் போய்விட்டது. கவலையில்லாமல் ஜீப் ஊரைக் கடந்துகொண்டிருந்தது. தங்கம் கண் விழித்துப் பார்த்த போது அவள் ஒரு காட்டுப் பிள்ளையார் கோயிலில் தான் இருப்பதைக் கண்டாள். முதலில் அது ஒரு கோயிலாக மட்டும் தான் தோன்றியது. ஆனால், சுந்தரேசனைப் பார்த்த பிறகு தங்கத்திற்குப் பழைய நினைவுகள வந்தன. அவள் கோயில் வாசல் வழியாகத் தன் பார்வையை வெளியே செலுத்திய போது ஒரே இருட்டாகத் தெரிந்தது. அப்போது சூரியனும் மேற்றிசையில் சாய்ந்து கொண்டிருந்த படியால், அந்தக் கோயிலைச் சுற்றியுள்ள காடு முழுவதும் மேன்மேலும் இருள் பரவி அது ஒரே பயங்கரப் பிரதேசமாக மாறிக் கொண் டிருந்தது. கோயிலின் உட்புறத்திலே பிள்ளையார் சன்னிதானத்தில் அக்கினிக்குண்டம் அமைக்கப்பட்டிருந்தது. சுற்றிலும் மாவிலையும் தோரணங்களும் கட்டப்பட்டிருந்தன. தன்னை யும் சுந்தரேசனையும் தவிர அங்கே கோயில் குருக்களும், காரோட்டி வந்த மனிதனும், இன்னும் இரண்டு பேர்வழி களும் இருப்பதைக் கண்டாள் தங்கம். கோயில் குருக்கள், 'ஊம், ஊம்! நாழியாகிறது; முகூர்த்த காலம் போய் விடப் போகிறது. அதோ பெண் விழித்து விட்டாள்: இங்கே கூட்டிவாருங்கள் என்று சுந்தரேசனை நோக்கிக் கூறினார் சுந்தரேசன், தன்னுடன் ஜீப்பை ஒட்டிக் கொண்டு வந்த மனிதனை நோக்கி, "அப்பண்ணா, மாலை எடுத்து வந்து விட்டாயா?’ என்று கேட்டான். அவன் ஒரு தாம்பாளத்தில் அழகாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்த ரோஜாப் பூ மாலைகளைக் காட்டி "இதோ!' என்று எக்களிப்புடன் கூறினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/249&oldid=854367" இலிருந்து மீள்விக்கப்பட்டது