பக்கம்:மன ஊஞ்சல்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 15 உண்மையான இராட்சசியைத் தான் சொன்னாள்' என்றான் மண்டையில் அடிபட்டுக் கிடந்த அந்த இளைஞன். 'பாவம்! அடிபட்டு மூளை கலங்கிப் போயிருக்கிறது. அதிகம் பேச்சுக் கொடுக்காதே தங்கம்!” என்று கடிந்து கொண்டாள் மரகத அம்மா. “அதெல்லாம் இல்லேம்மா, மூளை கலங்கவும் இல்லே ஒண்ணுமில்லே! உள்ளபடியே சொல்லுகிறேன், நடந்த விசயத்தைக் கேளுங்களேன்!” என்றான் அவன். தாயும் மகளும் பேசாதிருந்தனர். 'கேளுங்கம்மா, அந்தக் கமலம் இருக்காளே. அவளுக்கு என்னைப் பார்த்தா எப்போதும் கேலிதான். அவ மட்டு மில்லே, அவ கூட இருக்காங்களே ருக்கு, வள்ளி கோகிலம், விசயா எல்லோரும் அப்படித்தான். அவங்க எல்லோரும் கூடிக்கொண்டு நீ ஆண்பிள்ளை தானா என்று கேட்டாங்க. ஆண்பிள்ளை இல்லேன்னா நான் சேலையா கட்டிக் கொண் டிருக்கிறேன்?' என்றுகேட்டேன். வேட்டிகட்டிட்டா ஆண் பிள்ளையாயிடுவியா? தைரியம் வே ணு ம் தைரியம் என்றாங்க. 'என்ன செய் யனும் சொல்லு. உன் கையை முறிக்கவா? காலை ஒடிக்கவா? என்று கேட்டேன். உனக் குத்தான் கையில்லே-அதுக்கு எங்க கையையும் முறிக்க வேணுமா?’ என்று கேட்டா அம்மா, அப்புறம் அவள் என் கிட்டே வந்து, அழாதே! நீ ஆண்பிள்ளை தானே? ஒரு காரியம் செய்கிறாயா? என்றுகேட்டாள். எனக்கு ரோசம் வந்துவிட்டது. அழுகையை நிறுத்திவிட்டு, என்ன செய்ய வேனும்? சொல்! என்றேன். "அதோ, அங்கே ஒரு தோட்டம் இருக்கிறது. அதில் ஒரு மல்லிகைப் பந்தல் இருக்கிறது. அதிலே போய் எங்களுக் கெல்லாம் அரும்பு பறித்துக் கொண்டு வருகிற்ாயா?' என்று கேட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/25&oldid=854368" இலிருந்து மீள்விக்கப்பட்டது