பக்கம்:மன ஊஞ்சல்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 மன ஊஞ்சல் உடனே சுந்தரேசன் தங்கத்தின் பக்கம் திரும்பி, தங்கம், அந்த மாலையில் ஒன்றை எடுத்துக்கொண்டு பிள்ளையார் சன்னிதானத்திற்கு வா' என்றான். தங்கம், அவன் கூறிய மொழிகளைக் கேட்டுத் திகைத்து மயங்கி நின்றாள். அப்போது அவளுடைய மனத்தில் பீதி நிறைந்த பல எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மின்னல் களைப் போல் தோன்றித் தோன்றி மறைந்தன.

  • சுந்தரேசன் இவ்வளவு அயோக்கியனா? தன்னைக் கட்டாயத் தாலி கட்டித் திருமணம் செய்துகொள்வதற் காகத்தான் காட்டுக்குத் தூக்கி வந்தானா? ராதா சொன்ன படி, கயிலாய மாமாவின் சொத்தை அபகரிப்பதற்குத் தான், இவன் இப்படித் தனக்குக் கட்டாயத் தாலி கட்ட முயல்கிறான். தன்னை மனைவியாக்கிக்கொண்டு விட்டால், சொத்தெல்லாம் தானாகச் சேர்ந்துவிடும் என்று எண்ணு கிறான் போலிருக்கிறது. இப்படிப்பட்ட தீயவனின் மேல் எனக்குக் காதல் ஏற்பட்டதே!' என்று தன்னைத் தானே நொந்துகொண்டாள் தங்கம். -

தங்கம் சுந்தரேசனைச் சாதாரணத் தீயவன் என்றுதான் எண்ணினாள். ஆனால், அவள் எண்ணியதற்கும் மேற்பட்ட அளவு பொல்லாதவனாக இருந்தான் அந்தத் தீயவன். கோயில் குருக்கள் சூடத்தைக் கொளுத்திக்கொண்டே 'ஊம், ஊம் நேரமாகிறது!’ என்று மறுபடியும் கூவினார். சுந்தரேசன் தரதரவென்று தங்கத்தைப் பிள்ளையார் சன்னிதானத்திற்கு இழுத்துக்கொண்டு வந்தான். நல்லவர்கள் நல்ல செயல்களைச் செய்கிறபோது பார்த்துக்கொண்டு கல்லாக வீற்றிருந்த அந்தக் காட்டுப் பிள்ளையார் அந்தத் தீயவன் செய்த காரியங்களையும் பார்த்துக்கொண்டு கல்லாகத் தான் சமைந்திருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/250&oldid=854369" இலிருந்து மீள்விக்கப்பட்டது