பக்கம்:மன ஊஞ்சல்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 241 தங்கத்தை அந்தத் கல்லுப் பிள்ளையாரின் எதிரிலே இழுத்துக்கொண்டு வந்த சுந்தரேசன், 'தங்கம் இப்போது தான் நல்ல முகூர்த்தம்! எடு மாலையை சொன்னபடி கேளாவிட்டால் நான் சும்மா பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன்!” என்று உறுமினான். தங்கம், தான் சொல்வதைக் கேட்கமாட்டாள் என்ற எண்ணம் அவனுக்கு முன்னரே ஏற்பட்டிருந்தபடியால், அவன் இந்த வார்த்தைகளைக் கூறும் போது அவன் கண்கள் உருண்டு திரண்டு உறுத்து நோக்கின. அவன் முகம் நன்றாகச் சிவந்து போயிருந்தது. தங்கம் தன் கையைக்கூட அசைக்கவில்லை. அவள் ஒரே தீர்மானமாக இருந்தாள். செத்தாலும், அவனுக்கு மாலையிடுவதில்லை என்று மனத்தைத் திடப்படுத்திக் கொண்டிருந்தாள். சுந்தரேசனுக்குக் கோபம் கோபமாக வந்தது. "அவள் போடாவிட்டால் போகிறது, அப்பண்ணா எடு அந்த மாலையை' என்று உத்தரவிட்டான் சுந்தரேசன். அப்பண்ணா என்பவன் ஒரு மாலையைக் கையில் எடுத்து கொண்டு வந்தான். 'அப்பண்ணா, தாலிக் கயிற்றையும் தயாராக எடுத்துக் கொண்டு வா. மாலையைப் போட்டவுடன் தாலிகட்டி விடலாம்' என்றான் சுந்தரேசன். அவ்வாறே அப்பண்ணா மஞ்சள் தாலிக் கயிற்றையும் எடுத்துக் கொண்டு வந்தான். ம-16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/251&oldid=854370" இலிருந்து மீள்விக்கப்பட்டது