பக்கம்:மன ஊஞ்சல்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 மன ஊஞ்சல் "நான் இவளைப் பிடித்துக் கொள்கிறேன். மாலையைப் போட்டுத் தாலியைக் கட்டிவிடு' என்று சுந்தரேசன் கூறினான். அப்பண்ணா இரு கைகளிலும் மாலையையும் தாலியை யும் எடுத்துக் கொண்டு தங்கத்தை நோக்கி நடந்து வந்தான். சுந்தரேசன் பின்னால் நின்றபடி அவளுடைய தோள்கள் இரண்டையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். பூசாரி பிள்ளையாருக்குத் தீபங்காட்டிக் கொண்டிருந்தான். "அத் தான் உங்கள் கொடுந்தன்மைக்கு எல்லையே கிடையாதா?’ என்று சோகமயமான தீனக்குரலில் தங்கம் கேட்டாள். 'கிடையாது! கிடையாது! அப்பண்ணா சிக்கிரம் காரியத்தை முடி!' என்று வெறிபிடித்தவன் போல் கத்தி னான் சுந்தரேசன். அப்பண்ணா, மாலையைத் தங்கத்தின் கழுத்தில் போடுவதற்காக அவள் தலைக்கு மேலே துரக்கினான். தூக்கிய அந்த மாலை விர்ரென்று காற்றில் பறந்து கோயில் வாசலில் போய் விழுந்தது. அந்த சமயம், தங்கத்தைப் பிடித்திருத்த சுந்தரேசன் தலையில் பலமான அடியொன்று விழுந்தது. அப்பண்ணாவும், பூசாரியும் மீதி யிருந்த இரண்டு பேர்வழிகளும் பேய் பிசாசைக் கண்டவர்கள் போல் அரண்டு கோயில் வாசலை நோக்கித் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/252&oldid=854371" இலிருந்து மீள்விக்கப்பட்டது