பக்கம்:மன ஊஞ்சல்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蟾 ஊஞ்சல் 23.೧ಾನಿಕé555555 வழியில் சிக்கியதுபோல் திடீரென்று ஏற்பட்ட அந்த நிகழ்ச்சியைக் கண்டு தங்கம் திக்பிரமையடைந்து நின்றாள். காட்டுப் பிள்ளையார் கோயிலுக்கு வெளியே நின்ற ஜீப்கார் புறப்படும் சத்தம் கேட்ட பிறகுதான் தங்கம் தன்னிலையடைந்தாள். அவ ளுக்கு எதிரில் ஏழெட்டுப் பேர் கையில் துப்பாக்கிகளுடன் நின்று கொண்டிருந்தார்கள். அத்தனையும் வேட்டைத் துப்பாக்கிகள். அந்த மனிதர்களின் நடுவிலே நின்ற ஒருவன் தங்கத்தின், பார்வையிலே பட்டபோது அவனை எங்கோ பார்த்த மாதிரியாக இருந்தது. அவனோடு நெடுநாள் தொடர்பு கொண்டு பழகியிருப்பது போலவும் தங்கத்துக்குத் தோன்றியது. எங்கே? எங்கே? என்று யோசித்துப் பார்த் தாள் - தெரியவில்லை. அவன் யார்? யார்? என்று எண்ணிப் பார்த்தாள் -தெரியவில்லை. அவள் வேறு எங்கும் போனதில்லை. போன இடங்களில் யாரும் ஆடவருடன் பழகியதுமில்லை ஆனால், யாரோ ஒருவனைத் திடீரென்று தன்முன் வந்து நிற்கும் அவனை. எங்கோ பார்த்தது போவ வும், பழகியது போலவும் தனக்குத் தோன்றியது கண்டு தங்கம் வியப்படைந்தாள். நெடு நேரம் கண் கொட்டாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்த தங்கத்திற்குக் கடைசி யாக ஒரு சிறு நினைவு தோன்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/253&oldid=854372" இலிருந்து மீள்விக்கப்பட்டது