பக்கம்:மன ஊஞ்சல்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 மன ஊஞ்சல் ஆம், ஜமீந்தார் மாளிகைக்கு அவர்கள் புறப்பட்டு வந்த போது, பஸ் ஏற முனைத்த சமயம், ஒருவருக்குத் தான் இடமிருந்தது என்று கண்டக்டர் சொன்னானே, அந்தச் சமயம் இறங்கிக் கொண்டு இடங்கொடுத்த இளைஞன் இவனேதான்! அப்போது கூட அவனை எங்கோ பார்த்த நினைவாக இருந்தது, தங்கத்திற்கு நினைவில் மாறாமல் இருந்தது. ஆனால் அது மட்டுமா அதற்கு முன் அவனை எங்கே பார்த்திருக்கிறோம் என்பது மட்டும் அவளுக்கு இப் போதும் சரி அப்போதும் சரி சற்றேனும் நினைவுக்கு வர வில்லை. தன்னையே வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண் டிருக்கும் தங்கத்தைப் பார்த்து, 'அம்மா, நீங்கள் யார்? எப்படி இங்கே வந்து சேர்ந்தீர்கள்? அந்த முரடர்கள் யார்?" என்று அந்த இளைஞன் கேட்டான். அவன் குரல் கூட அவளுக்கு மிகவும் பழக்கப்பட்டதாகத் தோன்றியது. அவன் கேட்ட கேள்விகளுக்கு அவள் பதிலளித்தாள். நடந்த விஷயங்களை நடந்தவாறு கூறினாள். 'ஆ! அப்படியா செய்தி? சிறிது நேரத்திற்கு முன் எனக்கு இது தெரியாமல் போய்விட்டதே. இல்லாவிட்டால் அந்தப் பாவிப்பயல்களைச் சுட்டே கொன்றுவிட்டிருப்பேனே!" என்று கொதிப்படைந்தவன்போல் கூறினாள் அந்த இளைஞன். - அப்போது தங்கம் சற்றே திரும்பிப் பின்னால் பார்த் தாள். அங்கே தரையில் தன்னினைவற்றுக் கிடந்தான் சுந்தரேசன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/254&oldid=854373" இலிருந்து மீள்விக்கப்பட்டது