பக்கம்:மன ஊஞ்சல்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 245 ஆ! இந்தப் பாவி இன்னும் இங்கேதான் கிடக்கிறானா? என்று பின்னால் நின்ற துப்பாக்கிக்காரர்களிலே ஒருவன் கூறிக் கொண்டே முன்னால் ஓடி வந்தான். அவன் வந்த வேகத்தைப் பார்த்தால், அப்படியே, கீழே கிடக்கும் சுந்தரேசனை அடித்துக் கொன்றுவிடுவான் போலிருந்தது. ஆனால், அந்த இளைஞன் அவனைத் தடுத்து நிறுத்தினான். 'நண்பரே. அவன் கிடக்கட்டும், உணர்வற்றுக் கிடப்ப வனை நாம் என்ன செய்தாலும் பயனில்லை முதலில் இந்தப் பெண்ணை இவளுடைய வீட்டிலே கொண்டு போய் விட்டு விட்டு வருவோம்! என்று கூறினான் இளைஞன். எல்லோரும் இதற்கு இசைந்த பாவனையாகக் காணப் பட்டவுடன், அவன் 'அம்மா, நீங்கள் வாருங்கள். உங்களை மாளிகையிலே கொண்டுபோய்விட்டுவிடுகிறோம்' என்றான். எல்லோரும் அந்தக் காட்டுப் பிள்ளையார் கோயிலை விட்டு வெளியில் வந்தார்கள். இருட்டில் அந்தக் காடு முழு வதும் ஒரே பயங்கரப் பிரதேசமாகக் காட்சியளித்தது. ஆங்காங்கே நிழல்கள் ஆடுவது - ஏதேதோ பயங்கரமான உருவங்கள் பேயாட்டம் போடுவதுபோல் காட்சியளித்தன. மரவண்டுகளின் இடை விடாத ஓசையும் அங்கும் இங்குமாக ஏதோ ஊர்வதாலும் - மிருகங்கள் சில நடமாடுவதாலும் திடுதிப்பென்று ஏற்படுகின்ற சலசலப்பு ஓசையும். பயங்கரத் தன்மையை அதிகப்படுத்துவதாக இருந்தன. தங்கம், இது போன்ற ஒரு காட்சியை இதற்குமுன் கண்டதேயில்லை. அவளுக்கு மனத்துக்குள் ஒரே திகிலாயிருந்தது. ஆனால் அவள் அதை வெளிப்படுத்தவேயில்லை. கோயிலுக்கு வெளி யில் வந்ததும், அந்த ஆட்களில் ஒருவன் தீப்பெட்டியை உரசி னான். சிறிது நேரத்தில் அவர்கள் கையில் ஒரு தீப்பந்தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/255&oldid=854374" இலிருந்து மீள்விக்கப்பட்டது