பக்கம்:மன ஊஞ்சல்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 மன ஊஞ்சல் எரிந்துகொண்டிருந்தது, இளைஞன் அந்த ஆளை நோக்கி, 'ஏது இந்தத் தீவட்டி?” என்று கேட்டான். 'கோயிலில் ஒரு துரணருகில் சாற்றியிருந்தது. நான் எடுத்துக்கொண்டேன். நமக்கு வழிபார்த்துப் போகப் பயன் படுமே?' என்றான் அந்த ஆள். 'உன் மூளை படுமூளை தான்!' என்று அந்த இளைஞன் அவனைப் பாராட்டிப் பேசினான். அந்தத் தீவட்டியின் வெளிச்சம் அவர்களுக்குப் பாதை காட்டப் பயன்பட்டது. ஆனால், டயங்கரம் அதனால் அதிகமாகியது என்றுதான் சொல்ல வேண்டும். தீவட்டியின் ஒளிநாக்கு காற்றில் அசையும் போதெல் லாம் காட்டு மர நிழல்கள் அங்குமிங்கும் ஆடிய காட்சி, அந்தப் பயங்கர உருவங்கள் நெருங்கி நெருங்கி வரமுயல்வது, போலவும், கையைக்காலை ஆட்டிக்கொண்டு விழுங்கவருவது போலவும் தோன்றியது. தீவட்டி வெளிச்சத்தின் உதவியால், அவர்கள் அந்த அடர் காட்டின் ஊடே சிறிது துாரம் நடந்து சென்றார்கள். அந்த இளைஞனும் தங்கமும் முன்னே சொல்ல மற்ற நண்பர் கள் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார்கள். சிறிது தூரம் நடந்து சென்ற பிறகு, அவர்கள் ஒரு பெரிய ஆலமரத்தடியை அடைந்தார்கள். அங்கே ஏழெட்டுக் குதிரைகள் சேணத்துடன் கட்டிக் கிடந்தன. ஆளுக்கொரு குதிரையை அவர்கள் பிடித்துக் கொண்டார்கள். 'அம்மா, உங்களுக்குக் குதிரைச் சவாரி தெரியுமா?" என்று கேட்டான் அந்த இளைஞன். தங்கம் பதில் சொல்லத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/256&oldid=854375" இலிருந்து மீள்விக்கப்பட்டது