பக்கம்:மன ஊஞ்சல்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 247 'வண்டியெல்லாம் ஒட்டுறாங்க - குதிரையா ஒட்டத் தெரியாது’ என்று அந்த வேட்டைக்கார நண்பர்களிலே ஒருவன் கேட்டான். தங்கம் பரிதாபமாக அந்த இளைஞனைப் பார்த்தாள். அந்தப் பார்வையே அவளுக்குக் குதிரைச் சவாரி தெரி யாது என்பதைப் புலப்படுத்துவதாக இருந்தது. இதைக் கண்ட அந்த இளைஞன் பெருஞ்சிந்தனையில் ஆழ்ந்து விட்டான். அவர்கள் எல்லோருக்கும் ஆளுக்கொரு குதிரை யிருந்தது தங்கத்திற்குக் குதிரைச் சவாரி தெரியுமானால், அவளை ஒரு குதிரையில் ஏறிவரச் செய்து விட்டு மற்றவர் களில் யாராவது இருவரை ஒரு குதிரையில் வரச் சொல்ல லாம். அப்போது அவளுக்குத் தெரியாது என்பதால், கூட ஒரு குதிரையிருந்தாலும் பயனில்லை என்று எண்ண வேண்டி யிருந்தது. அவன் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த போது. வேட்டைக்கார நண்பர்களிலே ஒருவன், அந்த இளைஞனை நோக்கி, உங்கள் குதிரையில் ஏற்றிக் கொள்ளலாம் என்றான். அந்த இளைஞன் தங்கத்தை நோக்கினான். ‘அம்மா, என் குதிரையில் வருகிறீர்களா?” என்று கேட்டான். தங்கம் அவனைக் கூர்ந்து நோக்கினாள். அந்த முகத் திலே எவ்விதமான களங்கமும் காணப்படவில்லை. அந்த முகத்திலே எவ்விதமான தீய நோக்கத்தின் தன்மையும் பிரதி பலிக்கவில்லை. மேலும், அந்த முகம் - அவளுக்கு ஏதோ முன் தொடர்புடையது போலவும் - ஏதோ தனக்கு உறவுடை யது போலவும் தெரிந்ததால் அவள், அந்த இளைஞனுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/257&oldid=854376" இலிருந்து மீள்விக்கப்பட்டது