பக்கம்:மன ஊஞ்சல்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 மன ஊஞ்சல் ஒரே குதிரையில் செல்வதால் தவது ஒன்றும் ஏற்படாது என்ற முடிவுக்கு வந்தாள். அந்த முடிவுக்கு வருவதைத் தவிர அவளுக்கு அப்போது வேறு வழியும் எதுவும் இல்லை. அவள் அந்த இரவில் அந்தப் பயங்கரமான காட்டை விட்டுத் தப்பித் தன் தாய் தந்தையரிடம் போய்ச் சேர இருந்த ஒரே ஒரு மார்க்கம் அவனுடன் குதிரையில் போவதுதான். அதை விட்டால், அவள் அந்தக் காட்டிலேயே தங்க வேண்டியது தான். ஏழெட்டு ஆள்கள் கூட இருக்கும்போதே இதயமும் உடலும் நடுக்கமடையச் செய்துகொண்டிருக்கிற அந்தக் காட்டில் அவள் தன்னந் தனியாக எப்படியிருக்க முடியும்? அதுவும் தவிர, கோயிலில் மூர்ச்சையாகக் கிடக்கும் சுந்தரேசன் கண் விழித்தால் என்ன செய்வானென்று சொல்ல முடியாது. அவன் எண்ணம் நிறைவேறவில்லை என்ற ஆத்திரத்தில் என்ன கேடு வேண்டுமானாலும் செய் வான். இந்த நிலையில் நல்லெண்ணமுடையவனைப் போல் தோற்றமளிக்கிறவனும், ஏதோ முன் தொடர்பு உள்ளவன் போல் காணப்படுகிறவனுமாகிய அந்த இளைஞனுடைய குதிரையில் ஏறிச் செல்ல தங்கம் ஒப்புக் கொண்டாள். 'வருகிறேன்!" என்று அவள் வாய் திறந்து வார்த்தை சொன்னவுடனே அவன் தன் குதிரையைப் பிடித்துக்கொண்டு வந்து அருகில் நிறுத்தினான். தங்கம் அதன்மேல் தாவி ஏறி உட்கார்ந்தாள். அவளுக்குப் பின்புறமாக ஏறி உட்கார்ந்து கொண்டான் அந்த இளைஞன், வலது கையால் லகானைப் பிடித்துக்கொண்டு இடது கையால் அவளை அனைத்துப் பிடித்தபடி குதிரையைத் தட்டிவிட்டான். முன்னால், தீவட்டியுடன் ஒரு குதிரை செல்ல அதைத் தொடர்ந்து அந்த இளைஞனும் தங்கமும் ஏறியிருந்த குதிரை சென்றது. மற்ற குதிரைகள் பின்னால் வந்தன. பயங்கரமான காட்டு வழியில் இருட்டில் எந்தெந்தப் பக்கமோ குதிரைகள் வளைந்து வளைந்து சென்றன. அவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/258&oldid=854377" இலிருந்து மீள்விக்கப்பட்டது