பக்கம்:மன ஊஞ்சல்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 249 ஓடவில்லை - மெல்ல நடந்துதான் சென்று கொண்டிருந்தன. போகப் போகக் காடு நீண்டுகொண்டிருப்பது போலவும், மேலும் மேலும் அடர்ந்திருண்ட காட்டுக்குள்ளேயே செல்வது போலவும், அந்தக் காட்டு வெளியின் மையத்தை நோக்கியே சென்றுகொண்டிருப்பது போலவும் தங்கத்திற்குத் தோன்றி யது. தான் விழுந்துவிடாமல் இருப்பதற்காக அந்த இளைஞன் தன்னை அனைத்துக்கொண்டிருந்தான் என்ற போதிலும் தங்கத்திற்கு உடலை என்னவோ செய்வதுபோலிருந்தது. ஆனால், போகப்போக அந்த உணர்ச்சி மங்கிவிட்டது. குதிரை நடக்கும்போது அவன் மார்பின் மீது தன் உடல் மோதும் போதெல்லாம் இன்னதென்று சொல்லமுடியாத ஒர் உணர்ச்சி அவளுக்கு ஏற்பட்டது. அது இன்பமா துன்பமா என்பதே புரியாமலிருந்தது. சில சமயம் அவளுக்கு அவன்மீது சந்தேகம் ஏற்படும். இவனும் ஒரு சுந்தரேசனாக இருப் பானோ என்று தோன்றும். ஆனால், சே! சே! அவரைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை என்று மறுகணமே மனம் உறுதி கொள்ளும். சுமார் ஒரு மணி நேரம் அந்தக் குதிரைப் பயணம் நடந்தது. அந்த ஒரு மணி நேரமும் ஒர் ஆண்டுபோலத் தோன்றியது. கடைசியில், காடு குறைந்து - தீவட்டி வெளிச்சம் தெரியும் தூரத்தில் வீடுகளும் குடிசைகளும் கண்ணுக்குத் தென்பட ஆரம்பித்தன. பிறகு, ஊரே வந்து விட்டது. முதல் இரண்டு வீதிகளில் செல்லும் வரை தங்கம் ஏதோ புது ஊருக்குள் நுழைந்துவிட்டதாகவே எண்ணிக் கொண்டாள். ஆனால் மூன்றாவது வீதியைக் குதிரைகள் கடந்து செல்லும் போதுதான் 'இது கதலிப்பட்டணம்' என்று அறிந்து அவள் உள்ளம் அமைதியும் ஆனந்தமும் அடைந்தது. எப்படியோ ஒரு பெரிய இடரிலிருந்து தப்பி னோம் என்ற மன நிம்மதி அவளுக்கு அப்போதுதான் முழுமையாக ஏற்பட்டது. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/259&oldid=854378" இலிருந்து மீள்விக்கப்பட்டது