பக்கம்:மன ஊஞ்சல்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 மன ஊஞ்சல் ‘பூ! இவ்வளவு தானா?' என்று கேட்டுவிட்டுக் கிளம் பினேன். "இதோ பார். அந்த மல்லிகைப் பந்தல் பக்கத்திலே ஒர் இராட்சசி காவல் இருக்கிறாள். அவ பார்த்தா உன்னைப் பிடித்து, மல்லிகை பறித்த கையை அப்படியே கடித்துத் தின்று விடுவாள்' என்று சொன்னாள் கமலம். "இராட் சசியாவது, பிடிக்கிறதாவது?’ என்று சொல்லிக் கொண்டே சுவர் ஏறிக் குதித்து இந்தத் தோட்டத்துக் குள்ளே வந்தேன். மல்லிகை அரும்பு பறித்துக் கொண்டிருந் தேன்! இருந்தாலும் எனக்கு மனசுக்குள்ளே ஒரு ப ய ம் , எங்கிருந் தாவது இராட்சசி வந்துவிடுவாளோ என்று நெஞ்சு படக் படக் என்று. அடித்துக் கொண்டது. அப்போது திடீரென்று யாரோ அ. த ட் டு கிற குரல் கேட்டது. அவ்வளவுதான் "டயார்’ என்று பாய்ந்து சுவரின் மேல் ஏறினேன். இந்த ஒரு கையிலே விரல் இல்லாததனாலே, அவசரத்திலே நழுவி விழுந்து விட்டேன். அப்புறம் தலை கிர்ரென்று சுற்றுவது போல் இருந்தது. நல்ல வேளை! நீங்கள் வந்து என்னைக் காப்பாற்றிவிட்டீங்க. இல்லேன்னா அந்த இராட்சசி என்னைக் கடிச்சே தின்றுவிட்டிருப்பாள் இல்லையா?’ என்று கேட்டான் அந்த இளைஞன். "ஏற்கனவே பித்துக்குளி. அத்தோடு மூட நம்பிக்கையை வேறு ஏற்றிவிட்டார்கள் அந்தச் சுட்டிகள்!’’ இப்படி நினைத்து வருத்தப்பட்டாள் மரகத அம்மா. "இவ்வளவு அழகான உருவத்திற்குள் எவ்வளவு பைத்தியக்காரத்தனமான மூளை!' என்று எண் ணி அவனுக்காக அனுதாபப் பட்டாள் தங்கம். உலகம் விசித்திரமானது. பிறர் அனுதாபங் காட்ட வேண்டிய கீழான நிலையிலே சிலர் இருப்பார்கள். ஆனால் அவர்கள் வேறு சிலரைப் பார்த்து இரக்கப்படுவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/26&oldid=854379" இலிருந்து மீள்விக்கப்பட்டது