பக்கம்:மன ஊஞ்சல்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 மன ஊஞ்சல் வீதிகளைக் கடந்து வந்த குதிரைகள் ஜமீந்தார் மாளிகையிருக்கும் வீதி முனை வந்ததும் டக்கென்று நின்றன. அந்த இளைஞன் தங்கத்தை நோக்கி, 'அம்மா இனிமேல் நாங்கள் வந்தால் வீண் சந்தேகத்திற்கு இடமாகும். ஏனென்றால் இப்பொழுதே உங்களைத் தேட ஆரம்பித் திருப்பார்கள். இங்கேயிருந்து நீங்கள் மட்டும் தனியாகப் போய்விடமுடியுமா? அல்லது நான் கூட வந்து மாளிகை வரையில் விட்டு விட்டு வர வேண்டுமா?’ என்று கேட்டான் 'இல்லை, நானே போய்விடுகிறேன்!” என்று தங்கம் தைரியமாகக் கூறினாள். உடனே அந்த இளைஞன் அவளைக் குதிரையிலிருந்து கீழே இறக்கிவிட்டான். அவள் இறங்கிய வுடன் அந்தக் குதிரைகள் வேறு வீதியில் திரும்பி வேக நடை போட்டுப் பாய்ந்து சென்றன. தங்கம் தெருவோரமாக மெல்ல மெல்ல மாளிகையை நோக்கி நடந்து கொண்டிருந்தாள். வீதி முழுவதும் ஒரே அமைதியாக இருந்தது. பெற்றவர் கள் எங்கெங்கே தேடுகிறார்களோ, என்னென்ன நினைக் கிறார்களோ என்று பதறிக்கொண்டே நடந்தாள், அவள் மனம் விரைந்தது. ஆனால் நடை விரையவில்லை. அடிக்கடி கால்கள் தடுமாறின. வீதியில் கிடந்த பரற் கற்களில் காற்பெரு விரல் மோதிச் சில சமயம் வலியும் கொடுத்தது. எதிரில் ஒரு நாய் வந்தது. அது தன்னைக் கண்டால் குரைக்குமோ என்று பயந்தாள் தங்கம். அது இவளை நோக்கியே வந்தது. சட்டென்று நின்றாள். நல்ல வேளை! அது சிறிது நேரம் அவள் பக்கத்தே வந்து முகர்ந்து பார்த்து விட்டுத் தன்பாட்டில் நடை போட்டது. பிறகு தங்கம் தன் நடையைத் தொடர்ந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/260&oldid=854380" இலிருந்து மீள்விக்கப்பட்டது